அம்பானி-க்கு ஒரு மனோஜ் மோடி.. ஈஷா அம்பானிக்கு ஒரு பக்தி மோடி.. தலைமுறை தாண்டும் நட்பு..!!

முகேஷ் அம்பானி கிட்டத்தட்ட 931118 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இப்போது இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார். முகேஷ் அம்பானி ரூ.19,64,000 கோடிக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் ஆவார்.

முகேஷ் அம்பானியும் அவருடைய நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் தான் தற்போது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் பரந்த அளவிலான வணிகங்களை நிர்வாகம் செய்து வரும் வேளையில்.. தற்போது அம்பானியின் வாரிசு கைகளுக்கு நிர்வாகம் வந்தது போல் அவருடைய நண்பர்களின் வாரிசுகளும் ரிலையன்ஸ் நிர்வாகத்திற்கு வந்துள்ளனர்.

அப்படி முகேஷ் அம்பானி உடன் பெரும்பாலும் இருக்கும் ஒரு நபர் என்றால் அது மனோஜ் மோடி தான், கிட்டதட்ட முகேஷ் அம்பானியின் வலது கை, அந்த அளவுக்கு நம்பகமான நபர். இவர் யாரென தெரியாதவர்களுக்கு, மனோஜ் மோடி முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவர்.

ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்காக மனோஜ் மோடி பல முக்கிய முடிவுகளை எடுப்பதால் முகேஷ் அம்பானியின் வலது கை என்று நிறுவனத்தை தாண்டி வெளியுலகிலும் அறியப்படுகிறார். இதற்காகவே முகேஷ் அம்பானி மனோஜ் மோடிக்கு 1500 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை பரிசாக அளித்துள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், முகேஷ் அம்பானிக்கும் மனோஜ் மோடிக்கும் இடையிலான நம்பிக்கை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது தான்.

மனோஜ் மோடியின் மகள் பக்தி மோடி இப்போது ஈஷா அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைய்ல் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். அவர் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் ரூ.840000 கோடி மதிப்பை தொட உதவியுள்ளார்.

பக்தி மோடி அழகு சாதனப் பொருட்கள் தளமான டிராவின் (TIRA) இணை நிறுவனர் ஆவார். அவர் பிராண்டின் திட்டம் மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றை கவனித்து வருகிறார். டிராவை இஷா அம்பானி மேற்பார்வையிடுகிறார். இது Nykaa, Tata Cliq Palette, Myntra மற்றும் பிறவற்றுக்கு எதிராக போட்டியிடுகிறது.

பக்தி தனது கடின உழைப்பு, அறிவு, திறமை மற்றும் உறுதியுடன் ரிலையன்ஸின் உயர்மட்ட நிர்வாகிகள் வரை இடம்பிடித்துள்ளார்.

ரிலையன்ஸ் சில்லறை விற்பனையை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் தலைமைக் குழுவில் பக்தி மோடி ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறார். எகனாமிக் டைம்ஸின் கூற்றுப்படி, சமீபத்தில் மோடிக்கு ரிலையன்ஸ் ரீடெய்லின் அழகு வணிகத்தில் அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு ரிலையன்ஸ் பிராண்டுகளின் இயக்குநராக அறிவிக்கப்பட்டார். ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் பங்குதாரர்களாகி, உலகளாவிய ஆடம்பர பிராண்டுகளை இந்தியாவுக்குக் கொண்டுவருகிறது. Balenciaga, Armani, Hugo Boss, Versace, Michael Kors மற்றும் பலர் இந்தியாவில் ரிலையன்ஸ் ரீடெய்லின் பார்ட்னர் பிராண்டாக உள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *