விவாகரத்தில் முடிந்த திருமணம்.. 30 வயதுக்கு மேல் வரும் பிரச்சனை! – VJ ரம்யா
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்து ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் அபர்ஜித் என்பவரை 2014ல் திருமணம் செய்து கொண்டார்.
பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் தான் அது. கல்யாணம் முடிந்து ஒரு வாரத்திலேயே அவர் அம்மா வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். அதன் பின் சட்டப்படி விவாகரத்தும் பெற்றுவிட்டார்.
30 வயதுக்கு மேல் வரும் பிரச்சனை
இந்நிலையில் ரம்யா சுப்ரமணியன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 30 வயதுக்கு மேல் புது காதலரை தேடினால் வரும் பிரச்சனைகள் என குறிப்பிட்டு சில விஷயங்களை கூறி இருக்கிறார்.
அதனால் ‘ஆணியே புடுங்க வேணாம்,, Dating myself’ என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.