மெத்தை தீப்பிடித்து எரிந்து உடல்கருகி ஒருவர் பலி… சிகரெட்டால் விபரீதம்… !
இவர் ஏழுமலை வாசன் வீட்டின் 2வது தளத்தில் தகர கொட்டகை அமைத்து 5 பேருடன் தங்கியிருந்தார். இதில் 4 பேர் பொங்கலை முன்னிட்டு சொந்த ஊர் சென்று விட்டனர். கோவிந்தன் மட்டும் இருந்த நிலையில் இவர் மட்டும் தனியாக காலை முதல் மது அருந்திவிட்டு சிகரெட் புகைத்துக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தார்.
மதுபோதையில் சிகரெட் துண்டை அணைக்காமல் போட்டதால் மெத்தை தீப்பிடித்து படுக்கை எரிந்து தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். வீட்டின் உரிமையாளரின் மகன் மாடியில் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அதே நேரத்தில் விரைந்து வந்த காவல்துறையும் தீயில் கருகியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.