கலப்பு திருமணம் செய்த இளம் பெண் ஆணவக் கொலை ? …. அதிர்ச்சி ரிப்போர்ட்… !

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நெய்விடுதி கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள். இவரின் மகள் 19 வயது ஐஸ்வர்யா.

பக்கத்து கிராமமான பூவாளூரில் வசித்து வருபவர் பாஸ்கர். இவரின் மகன் நவீன் . இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஐஸ்வர்யாவும், பட்டியலினத்தைச் சேர்ந்த நவீனும் பள்ளி காலத்திலிருந்தே நண்பர்கள். நட்பு காதலாகி காதலித்து கொண்டே படித்தனர். படிப்பை முடித்த பிறகு இருவரும், ஒரே கம்பெனியில் திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளனர்.

இருவரும் 15 நாட்களுக்கு முன் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது குறித்த வீடியோ ஒன்றும் வாட்ஸ்அப் குரூப்பில் பரவியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவின் உறவினர்கள் போலீசிடம் பேசி ஐஸ்வர்யாவை மட்டும் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.அங்கு ஐஸ்வர்யாவை உறவினர்கள் அடித்து துன்புறுத்திய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த ஐஸ்வர்யாவின் உடலை, உறவினர்கள் போலீசிடம் தெரிவிக்காமல் எரித்து விட்டனர். பட்டியலின சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால் ஐஸ்வர்யாவை ஆணவக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தால் கிராமம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டதற்காக அவரது உறவினர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஐஸ்வர்யாவை ஆணவக் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இச்சம்பவம் குறித்து வழக்கு ப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *