மகன் கண் முன்னே கடலில் மூழ்கிய தாயார்… இந்தியாவில் பிரித்தானியருக்கு ஏற்பட்ட துயரம்

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோவிலுக்கு அருகே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட தாயார் ஒருவர், தனது மகன் கண் முன்னால் மூழ்கி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரம் நகருக்கு தனது மகனுடன்
குறித்த 84 வயதான தாயார், இந்தியாவில் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரம் நகருக்கு தனது மகனுடன் திங்கள்கிழமை சென்றுள்ளார். இருவரும் கடற்கரையோரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று, அதன் பக்கத்திலுள்ள கடற்கரைக்கும் சென்றதாக கூறபப்டுகிறது.

இந்த நிலையில், அலை ஒன்று, அந்த தாயாரை கடலுக்குள் இழுத்து சென்றதாக நம்பப்படுகிறது. அவரது மகன் தமது தாயாரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது.

இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர், அந்த பெண்மணியின் உடல் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து வந்த பொலிசார், உடலை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடற்கரை தேவாலயம்
தொடர்ந்து அந்த தாயாரின் சடலத்தை பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர், கோவா மாகாணத்தில், கடற்கரை தேவாலயம் ஒன்றின் மைதானத்தில் பிரித்தானிய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

46 வயதான Emma Leaning என அடையாளம் காணப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அவரது உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கு பதிந்துள்ள நிலையில், விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *