மரத்தில் மறைந்திருக்கும் மலைப் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரே நிறத்தில் இருக்கும் இடங்களில் இருக்கும் விலங்குகள் பார்வைக்குப் புலனாவதில்லை. பச்சை மரத்தில் இருக்கும் பச்சைப் பாம்பு தெரிவதில்லை. தண்ணீருக்குள் இருக்கும் தண்ணீர் பாம்பு தெரிவதில்லை. யானைகளுக்கு இடையே இருக்கும் காண்டாமிருகத்தை கண்டுபிடிகக் முடிவதில்லை.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் மறைந்திருக்கும் மலைப் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடி. முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை. ஆப்டிகல் இல்யூஷன் சவால் பார்வைத் திறன் மற்றும் யோசித்து தேடும் திறனுக்கான சவால். மனிதனின் பார்வைத் திறன் என்பது ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பதுதான். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களுடைய இந்த திறனை மேலும் கூர்மையாக்குகிறது. ஏனென்றால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். ஆனால், நீங்கள் பலே கில்லாடி என்றால் மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.