இளைஞர்களை தாக்கும் புதிய வியாதி.. 90’ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் உஷாரா இருங்க.. இல்லாட்டி ரொம்ப கஷ்டம்..!!

இந்த நவீன உலகில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. ஸ்மார்ட் போன்கள் வாயிலாக 24 மணி நேரமும் சமூக ஊடகங்கள் உடன் நம் வாழ்க்கையுடன் இணைந்துள்ளன.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் ஆகிய தளங்களில் வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்தவர்களை பின் தொடர்கிறோம். இதன் மூலம் பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக் கொண்டாலும், நமக்கே தெரியாமல் ஒரு நவீன மனநோய்க்கு ஆளாகி வருகிறோம் என்கிறது சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு.

சமூக ஊடகங்களால் மனநோயா?: சமூக ஊடங்களில் மக்கள் தங்கள் ஆடம்பர வாழ்க்கை, சுற்றுலா ஆகியவற்றை அதிகளவில் படம்பிடித்து வெளியிடுகின்றனர். இத்தகைய தகவல்கள் நம் மனதினுள் குறிப்பாக இளைஞர்கள் மனதினுள் ஏற்படும் தாக்கம் என்ன தெரியுமா?

இப்படியெல்லாம் செலவு செய்தால் தான் நாம் வளர்ச்சி அடைந்ததாக அர்த்தம் என மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. இதனால் நிதி சார்ந்த மன நோய்க்கு ஆளாகி, நிதி மேலாண்மையில் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் MONEY DYSMORPHIA என்கின்றனர்.

குவால்ட்ரிக்ஸ் ஃபார் இண்ட்யூட் கிரெடிட் கர்மா நடத்திய சமீபத்திய ஆய்வில், மில்லினியல்கள் 59% மற்றும் ஜென் Z 48% சமூக ஊடக அழுத்தத்தால் நிதி சார்ந்த முடிவுகளை சரியாக எடுக்க முடியாமல் தவிக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.

என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படுகின்றன?: பணம் சம்பாதிப்பது, குடும்பம் சார்ந்த நமது செலவுகள், நிதி ஸ்திரத்தன்மை, முதலீடு, சேமிப்பு இவற்றை கருத்தில் கொண்டால் நாம் ஒவ்வொருக்குமான தேவை தனித்துவமானதாக இருக்கும்.

உதாரணத்திற்கு 25 வயது இளம்பெண் ஒருவர் லூயிஸ் விட்டன் பிராண்டட் பேக் வாங்கி சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார். இந்த பிராண்டட் பை வாங்கினால் தான் நமக்கும் ஒரு அந்தஸ்து கிடைக்கும் அல்லது இது தான் நம் வளர்ச்சியை உலகிற்கு காட்டும் என எண்ணி, மற்றவர்கள் தங்கள் நிலையை உணராமல் ஆயிரக்கணக்கில் செலவிட்டு அதே பிராண்டட் பையை வாங்குகின்றனர்.

ஆனால் அந்த இளம்பெண்ணின் வாழ்க்கை நிலையும் , அந்த தகவலை கிரகித்து கொள்பவர்களின் வாழ்க்கை நிலையும் ஒன்று கிடையாது. இந்த புரிதல் இல்லாமல் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி கொள்ளாமல் இளைஞர்கள் பலர் தவறான முறையில் பணத்தை செலவிட்டு பின்னர் வருத்தப்படுகின்றனர் என்பது தான் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து.

ஏன் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகம்?: இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் காட்டப்படும் ஆடம்பரமான வாழ்க்கை முறைகள் , இளைய தலைமுறையினரின் நிதி இலக்குகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆக்சிஜன் ஃபைனான்சியல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெட் ஜெங்கின், சமூக ஊடகங்கள் ஆடம்பரமான சுற்றுலா, பிராண்டட் பொருட்கள், ஆகியவை அடிப்படை உரிமைகள் என்ற தவறான கருத்தை இளைஞர்கள் மனதில் விதைப்பதாக கூறுகிறார். ஒரு முரண்பாடான யதார்த்தத்திற்கு இணங்க வேண்டிய சூழலுக்கு இளைஞர்கள் தள்ளப்படுகின்றனர் என்கிறார்.

தீர்வு தரும் புதிய பட்ஜெட் முறை: சமூக ஊடக அழுத்தங்களுக்கு ஆளாகி நிதி சிக்கல்களை எதிர்கொள்வதை தடுப்பதற்காகவே தற்போது லவுட் பட்ஜெட்டிங்(LOUD BUDGET) என்ற முறை டிரெண்டாகி வருகிறது. அதாவது சமூக ஊடகங்கள் ஊக்குவிக்கும் ஆடம்பரத்திற்கு முற்றிலும் எதிரானது தான் இந்த லவுட் பட்ஜெட் முறை.

மற்றவர்களை பின்பற்றுவதற்கு பதிலாக பணத்தை பற்றிய உங்கள் நோக்கங்களை சரியாக தீர்மானித்து அதனை வெளிப்படையாக கூறுவது. அதாவது உங்களின் நிதி நிலைமை என்ன, நிதி இலக்குகள் என்ன, அதனை எப்படி அடைகிறீர்கள் என்பதை பகிரங்கமாக சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவது.

உதாரணத்திற்கு முதலில் ஒரு ஆடம்பர சுற்றுலாவுக்கு சென்று கடனாளி ஆகாமால், அதனை இலக்காக கொண்டு பணத்தை சேமித்து, அதில் சுற்றுலா செல்வது. இது நிதி சார்ந்த திட்டமிடலில் உங்களை ராஜாவுக்கும் என்கிறது லவுட் பட்ஜெட்டிங் முறை. அப்புறமென்ன முயற்சி செஞ்சு பாருங்க!

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *