டாடா குழுமத்தில் ஆதிக்கம் பெறும் புதிய வாரிசு.. யார் இந்த நெவில் டாடா..?
நம் நாட்டின் வர்த்தகத் துறையில் மிகச் சிறந்த ஆளுமையை வெளிப்படுத்தியவர் டாடா குரூப்பின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா என்று சொன்னால் யாராலும் மறுக்க முடியாது.
இவரது நிழலில் சத்தமில்லாமல் வளர்ந்த ஒரு முக்கிய நபரைப் பற்றி அநேகம் பேருக்குத் தெரியவில்லை. அவரது தொழில்நுணுக்கங்கங்கள் இப்போது பிரபலமாகி வருகிறது. அவர் பெயர் நெவில் டாடா. டாடா குடும்பத்தின் நேரடி வாரிசான நெவில் டாடா, நோயல் நேவல் டாடாவின் மகன் ஆவார். டாடா குரூப் தலைவரான மறைந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரி அலு மிஸ்திரி இவரது தாயார் ஆவார். டாடா குடும்பப் பின்னணியில் வளர்ந்த நெவிலின் ரத்தத்தில் இயல்பிலேயே தொழில்முனையும் ஆர்வமும் நேர்மையும் ஊறியுள்ளன. பிரபல தொழில் குடும்பத்தைச் சேர்ந்த மானஸி கிர்லோஸ்கரை நெவில் திருமணம் செய்துள்ளார். இருபெரும் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த நெவில் டாடா பற்றி இனி விரிவாக அறிந்து கொள்வோம். பேயஸ் பிஸினஸ் ஸ்கூலில் பட்டப்படிப்பை நெவில் டாடா முடித்தார். அதன்பின்னர் தொழில்துறைக்குள் காலடியெடுத்து வைத்தார்.
2016 ஆம் ஆண்டில் டாடா குரூப்பின் டிரென்டில் (Trent) அவர் சேர்ந்தார். இந்த நிறுவனம் அவரது பாட்டி சிமோன் டாடாவால் தொடங்கப்பட்டது. நெவில்லின் தந்தை நோயல் டாடா அதை நடத்தி வந்தார். டிரென்டில் அவர் பிரபல பேஷன் ரீடெய்ல் பிராண்டான ஜுடியோ (Zudio) ஸ்டோர்ஸின் நிர்வாகத்தை கவனித்து வந்தார். இந்தியாவின் மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் ஜுடியோ பிராண்டு பிரபலமாக உள்ளது. அவரது தொலைநோக்கு பார்வைகள் மற்றும் அயராத உழைப்பினால் ஜுடியோ நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தது. பிரபல தொழிலதிபர் விக்ரம் கிர்லோஸ்கரின் மகள் மானஸி கிர்லோஸ்கரை நெவில் டாடா திருமணம் செய்து கொண்டார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தத் திருமணம் மூலம் இருபெரும் தொழில் குடும்பங்கள் ஒன்றிணைந்தன. இதன் மூலம் இந்திய கார்ப்பொரேட் துறையில் குறிப்பிட்ட ஆளுமையை இந்த தம்பதி உருவாக்கியது. அவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்ற போதும் அவர்களது குடும்பப் பின்னணி காரணமாக மக்களின் கவனத்தை ஈர்ந்தது.
ரத்தன் டாடாவின் ஆசியுடன் அவர்களது வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. ரீடெய்ல் தொழிலில் புதிய சாதனைகளை நெவில் படைத்து வந்த வேளையில் மானஸி கிர்லோஸ்கர் தனக்கே உரிய பாணியில் பணியாற்றினார்.