பாரதத்தின் புதிய வரலாறு ‘ராமராஜ்ஜியம்’

ராம ராஜ்யம் தொடங்கிவிட்டது: ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் திங்கள்கிழமை கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படுவதன் மூலம் ராம ராஜ்யம் தொடங்கும்.

மேலும் அனைத்து விதமான ஏற்றத்தாழ்வுகளும் முடிவுக்கு வரும். அனைவரும் அன்புடன் பழகுவார்கள். அயோத்தியிலிருந்து தொடங்கும் இந்த மாற்றம் நாடு முழுவதும் பரவும். இனி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வார்கள். நல்லெண்ணத்துடன் நாம் அனைவரும் வாழ்வோம். ராமபிரானின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்.

எல்லாம் நன்றாகத்தான் நடக்கிறது. ராம பக்தர்களின் விருப்பம் இன்று (நேற்று) நிறைவேறுகிறது. குழந்தை ராமர் கருவறையில் அமர்ந்தவுடன் நம்முடைய எல்லா கஷ்டங்களும் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

32 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயிலுக்கு முன் உமா பாரதி: பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, 32 ஆண்டுகள் மற்றும் 46 நாட்களுக்கு பிறகு நேற்று அயோத்தி வந்திருந்தார். கடைசியாக 1992 டிசம்பர்6-ல் கரசேவகர்களால் பாபர் மசூதிஇடிக்கப்பட்ட நாளில் அவர் அயோத்தியில் இருந்தார். குழந்தை ராமர் பிறந்த இடமாகலட்சக் கணக்கான இந்துக்களால் நம்பப்படும் இடத்தில் இன்று பிரம்மாண்ட ராமர் கோயில் எழுந்துள்ளது.

பாஜகவின் ஆவேசப் பேச்சாளரான உமா பாரதி, 1990-களின் ராமர் கோயில் இயக்கத்தில் முன்னணியில் இருந்தார். ராமர் கோயில் இயக்கத்தின் மற்றொரு பிரபல பெண் தலைவரான சாத்வி ரிதம்பராவுடன் அவர் விழாவில் காணப்பட்டார். பிரான் பிரதிஷ்டா சடங்குகளுக்காக பிரம்மாண்ட கோயிலின் படிக்கட்டுகளில் பிரதமர் மோடி ஏறுவதற்குசற்று முன்பாக உமா பாரதி, எக்ஸ் சமூக வலைதளத்தில், ‘அயோத்தியில் ராமர் கோயிலுக்கு முன் இருக்கிறேன். குழந்தை ராமருக்காக காத்திருக்கிறேன்’ என்று தனது புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

1992, டிசம்பர் 6-ல் அயோத்தியில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் உமா பாரதி சிரித்த முகத்துடன் காணப்படும் ஒரு தருணம்இன்றும் ஒரு புகைப்பட ஆவணமாக திகழ்கிறது. தற்போது 90 வயதாகும் முரளி மனோகர் ஜோஷி, ராமர் கோயில் விழாவில் பங்கேற்கவில்லை. ராம ஜென்மபூமி இயக்கத்தின் தளகர்த்தரான எல்.கே.அத்வானியும் மோசமான காலநிலையை சுட்டிக்காட்டி விழாவில் பங்கேற்கவில்லை.

ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு கடந்த வாரம் வாழ்த்து தெரிவித்த அத்வானி, ‘கோயில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடியை ராமர் தேர்வுசெய்துள்ளார்’ என்று குறிப்பிட்டிருந்தார். அத்வானி, ஜோஷி போன்ற மூத்ததலைவர்கள் பங்கேற்காத நிலையில்1990-களின் ராமர் கோயில் இயக்கத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் விழாவில் கலந்துகொண்டனர். இவர்களில் உமா பாரதியும் ஒருவர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *