இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வகை மாதுளை
இலங்கையில் இரண்டு வகையான புதிய மாதுளைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
புதிய வகை மாதுளை
புதிய மாதுளை வகைகளுக்கு ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என பெயரிடப்பட்டு, இலங்கையின் உலர் வலயங்களில் பயிரிடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாதுளை வகைகளின் அறிமுகம் நேற்று காலை ஹோமாகம தாவர வைரஸ் அடையாள நிலையத்தில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த இரண்டு சமீபத்திய வகைகளின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒரு மாதுளை மரத்தின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது, மேலும் ஒரு மரத்தில் ஆண்டுக்கு 20 முதல் 25 கிலோ வரை மாதுளை அறுவடை செய்யலாம்.
ஒரு ஏக்கருக்கு நானூறு மரங்களை நட்டு, ஆண்டுக்கு ரூ. 8 மில்லியன் சம்பாதிக்கலாம். குறிப்பாக இந்த இரண்டு வகை மாதுளைகளும் உலர் வலயத்தில் பயிரிடுவதற்கு ஏற்றதாகும்.
தற்போது இறக்குமதி செய்யப்படும் சிவப்பு மாதுளை வகைகளுக்கு மாற்றாக இந்த மாதுளை வகைகளை பயன்படுத்த முடியும் என்பதால் மாதுளை இறக்குமதி செலவை குறைக்க முடியும் என அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்.