பணக்காரர்கள் வரிசை கட்டி காத்திருக்கும் அரண்மனை.. எல்லாம் இந்த ஒரு விஷயத்திற்காக..!!
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் போன்ற சர்வதேச பிரபலங்களின் திருமணங்கள் நடத்த உதய்ப்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனை மிகவும் பிடித்தமான இடமாக மாறிவிட்டது.
ஹோட்டலாக மாற்றப்பட்ட இந்த அரண்மனையில் 347 அறைகள் உள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய தனிநபர் குடியிருப்பும் ஆகும். இந்த அரண்மனையில் திருமணங்கள், விழாக்களை நடத்த பணக்காரர்கள் வரிசை கட்டி காத்திருக்கும் நிலை உள்ளது. ஆடம்பர திருமணம் என்றாலே உதய்ப்பூர் உமைத் பவன் அரண்மனை தான் எல்லோருக்கும் முதல் சாய்ஸ் ஆக மாறிவிட்டது. இந்த அரண்மனையில் சிவரஞ்சனி ராஜே வசித்து வருகிறார். தனது அரசவம்ச சொத்துக்களை லாபகரமானதாக ஷ்வ்ரஞ்சனி ராஜே மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. சிவரஞ்சனி ராஜே ஜோத்பூர் அரசர் இரண்டாம் கஜ் சிங்கின் ஒரே மகள் ஆவார்.கோட்டைகள், அரண்மனைகளை அருங்காட்சியகங்கள் மற்றும் ஹோட்டல்களாக மாற்றுவதை ஒரு தொழிலாக விரிவுபடுத்துவதில் சிவரஞ்சனி வெற்றி கண்டார். ராஜே கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தொழிலில் சேர்ந்தார். அந்த நேரத்தில், அவர்களின் குடும்ப வணிகம் பொருளாதார ரீதியாக கடினமான நேரத்தைச் சந்தித்தது. அவரது இளைய சகோதரர் ஒரு போலோ விளையாட்டின்போது விபத்துக்கு ஆளாகி கோமா நிலைக்குச் சென்றார். அவர் குணமடைய பல ஆண்டுகள் ஆனது. சிவரஞ்சனி ராஜேயின் தந்தை இரண்டாம் கஜ் சிங் ஹன்வந்த் சிங்கைத் தொடர்ந்து ஜோத்பூரின் 29ஆவது மகாராஜாவாகப் பதவியேற்றார். கஜ் சிங்கின் தந்தை ஹன்வந்த் சிங் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். அப்போது கஜ் சிங்குக்கு வயது 4.மகாராஜா உமைத் சிங்கால் உமைத் அரண்மனை 1943 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தனது குடும்பத் தொழிலை சிவரஞ்சனி ராஜே ஏற்றுக் கொண்டு அரச குடும்பத்துக்காக பெரும் லாபத்தை ஈட்டித் தந்தார். மேற்கு இந்தியத் தீவின் டிரினாட் அண்டு டுபாகோ அணியை இந்தியாவுக்கு கொண்டு வந்து விளையாட வைத்தார்.இங்கிலாந்தில் தனது கல்வியை ராஜே மேற்கொண்டார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மனிதவியல் டிகிரியை முடித்தார். பின்னர் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நிறுவனத்தில் திரைப்படத் தயாரிப்பில் ஒரு பட்டயப் படிப்பை முடித்தார். இருப்பினும் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள உமைத் அரண்மனை இப்போது உலகெங்கும் பிரபலமாகி விட்டது. அதை சொந்தம் கொண்டாடும் சிவரஞ்சனி ராஜே இந்த உமைத் அரண்மனையை ஒரு உல்லாசமான ஹோட்டலாக்கி நல்ல லாபத்தை பார்த்து வருகிறார்.உமைத் அரண்மனையின் 347 அறைகளில் சிவரஞ்சனி ராஜேவுக்கு தனியொரு அறை உள்ளது. அதில்தான் அவர் தங்கிக் கொள்கிறார்.