விடாமல் தொடரும் பிரச்சினை! சென்னை திரும்பும் ஒட்டுமொத்த விடாமுயற்சி படக்குழு – அடுத்த ஏர்போர்ட் வீடியோ லோடிங்

தமிழ் சினிமாவில் ஒர் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். எக்கச்சக்க ரசிகர்களை தன்னுள் அடக்கி வைத்திருப்பவர். மற்ற நடிகர்களைப் போல் சொத்துக்களை வாரி வாரி சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லாதவர் அஜித்.
விஜய் கூட ஒரு மேடையில் அஜித்திடம் தனக்கு பிடித்திருப்பது அவரின் தன்னம்பிக்கை என்று சொல்லியிருப்பார். நிஜமாகவே அதுதான் உண்மை. எத்தனையோ முறை தோல்வி கண்ட பொழுதும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கிறார் என்றால் அதற்கு காரணமே அவரின் ரசிகர்கள்தான்.
அவர்கள் கொடுக்கும் நம்பிக்கை மற்றும் இவரின் தன்னம்பிக்கை ஆகிய இரண்டும்தான் அஜித்தை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடக்கிறது. எப்படியாவது பிப்ரவரியில் படப்பிடிப்பை முடித்து ஏப்ரலில் படத்தை ரிலீஸுக்கு கொண்டு வரலாம் என படக்குழு நினைத்திருந்தார்கள். ஆனால் இயற்கை சும்மா விடுமா?
கடுங்குளிர் மற்றும் பனியால் அவர்களால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம். இதுபோதாது என்று சூறாவளியும் கிளம்பியிருக்கின்றனவாம். எங்கேயோ ஒரு இடத்தில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென சூறாவளி கிளம்பி மணலை வாரி இறைத்துப் போட்டிருக்கிறது.
இந்த நிலைமை இன்னும் ஒரு வாரம் இருக்குமாம். அதனால் அதுவரை அத்தனை பேரையும் அங்கேயே வைத்திருப்பது என்பது சாத்தியமாகாது என்று கருதி நாளை விடாமுயற்சி படக்குழு சென்னை திரும்புகிறதாம். அஜித் வருகிறாரா என்று தெரியவில்லை. ஒரு வேளை துபாயில் அவருக்கு வீடு இருப்பதால் அங்கேயே இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.