மணிக்கு 13 கோடி சம்பாதிக்கும் நபர்.! யார் அந்த பெருந்தொழிலதிபர்?

மாதம் பல கோடி ரூபாய் சம்பாதிப்பவர் பணக்காரராகவும் வெற்றிகரமானவராகவும் கருதப்படுகிறார்.

ஆனால் ஒரு மணி நேரத்தில் கோடி கோடியாக சம்பாதிக்கும் நபர் பற்றி தெரியுமா?

அவர் வேறு யாருமல்ல, Tesla, X.com மற்றும் SpaceX நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk).

Bloomberg Billionaires Index-ன் படி எலோன் மஸ்க் 213 Billion US Dollars (இலங்கை ரூபாயில் சுமார் 65 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

மணிக்கு 13 கோடி
இந்நிலையில், சமீபத்திய Finbold அறிக்கையின்படி, கோடீஸ்வரரான எலோன் மஸ்க் ஒரு நிமிடத்திற்கு சுமார் 6,887 டொலர் (LKR 22 Lakhs) சம்பாதிக்கிறார், அதாவது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 413,220 டொலர், அதாவது தோராயமாக ரூ. 13 கோடி ஆகும்.

அதுவே, நாளில் $9,917,280 (LKR 310 Crores), ஒரு வாரத்திற்கு $69,420,960 (LKR 2170 Crores) சம்பாதிக்கிறார்.

டெஸ்லாவில் (Tesla) 20.5 சதவீதம், ஸ்டார்லிங்கில் (Starlink) 54 சதவீதம், ஸ்பேஸ்எக்ஸில் (SpaceX) 42 சதவீதம், எக்ஸில் (X) 74 சதவீதம் (முன்னர் ட்விட்டர்), தி போரிங் நிறுவனத்தில் (The Boring Company) 90 சதவீதம், எக்ஸ்ஏஐயில் (xAI) 25 சதவீதம் மற்றும் பல வணிகங்களில் மஸ்க்கின் பங்குகள் உள்ளன.

மேலும், நியூராலிங்கில் (Neuralink) உள்ள 50 சதவீதத்திற்கும் மேலான பங்குகள் உட்பட அனைத்தையும்சேர்த்து அவரது Net Worthஐ கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது.

எலோன் மஸ்க் 1971-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் தலைநகரான பிரிட்டோரியாவில் (Pretoria) பிறந்தார்.

பணக்கார குடும்பத்தில் இருந்து வந்த மஸ்க், கணினி மற்றும் வடிவமைப்பில் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார்.

17 வயதில், கனடாவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், பின்னர் வணிகம் மற்றும் இயற்பியல் படிப்பதற்காக பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.

எலோன் மஸ்க் மற்றும் அவரது சகோதரர் கிம்பால் (Kimbal) ஆகியோர் ஓன்லைன் வணிகக் கோப்பகமான Zip2 ஐ நிறுவினர்.

ஆனால் எலோன் மஸ்க் இணையத்தின் மீது மிகவும் ஆர்வமாக இருந்தார். 1999-இல், சகோதரர்கள் Zip2-ஐ Compaq-கிற்கு $307 மில்லியனுக்கு விற்றனர். Zip2 விற்பனை மூலம் எலோன் மஸ்க் 22 மில்லியன் டொலர் சம்பாதித்தார்.

பின்னர் McLaren F1 சூப்பர் காருக்கு 1 மில்லியன் செலவிட்டார். அதன் பிறகு, எலோன் மஸ்க் ஒரு வங்கி தொடக்கத்தை நிறுவினார். இது இறுதியில் மற்றொரு வணிகத்துடன் இணைக்கப்பட்டது.

அதற்கு PayPal என்று பெயரிடப்பட்டது. எலோன் மஸ்க் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானார். 2002-இல் PayPal-ஐ 1.5 பில்லியனுக்கு eBay வாங்கியது.

இப்போது, உலகின் பெரும் பணக்காரராக உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் மெட்டாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், LVMH பெர்னார்ட் அர்னால்ட் போன்ற நபர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறார்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *