அரண்மனையில் இருந்து தொலைபேசி அழைப்பு… உடனடியாக லண்டன் திரும்பும் இளவரசர் ஹரி
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து இளவரசர் ஹரி உடனடியாக நாடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொலைபேசியில் இளவரசர் ஹரி
மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானதும், இளவரசர் ஹரி தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் ஹரி லண்டன் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் தனியார் மருத்துவமனை ஒன்றில் மன்னர் சார்லஸுக்கு புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது முன்னெடுக்கப்பட்ட விரிவான பரிசோதனையில் மருத்துவர்களுக்கு இன்னொரு சந்தேகமும் ஏற்பட்டிருந்தது. தற்போது அது பொற்றுநோய் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில், அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹரி மிக விரைவில் லண்டன் திரும்ப இருக்கிறார்.
உரிய சிகிச்சை
தமக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை மன்னர் சார்லஸ் தமது சகோதரர்கள் மற்றும் இளவரசர் ஹரி உட்பட பிள்ளைகளிடமும் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கமிலா மன்னர் சார்லஸுக்கு ஆதரவாக முக்கிய முடிவுகளை முன்னெடுக்க தயாராகி வருகிறார் என்றே கூறப்படுகிறது. மன்னர் சார்லஸுக்கு துறை சார்ந்த நிபுணர்களிடம் இருந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சிகிச்சை தொடர்வதுடன் அலுவல்களிலும் மன்னர் ஈடுபட இருக்கிறார். அத்துடன் வழக்கமாக ஒவ்வொரு வாரமும் பிரித்தானிய பிரதமருடனான சந்திப்பு முன்னெடுப்பது தொடரும் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, சிகிச்சை முடியும் வரையில் அரசு அலுவல்களை தொடர வேண்டாம் என இளவரசர் வில்லியம் உட்பட மன்னரின் சகோதரர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.