2023 ஆம் ஆண்டில் தலைப்புச் செய்தியில் இடம் பெற்ற டாப் 5 நோய்கள்!

Year Ender 2023: என்ன தான் மருத்துவ உலகில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், நாளுக்கு நாள் விதவிதமான நோய்கள் உலகெங்கிலும் பரவிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றில் பல நோய்கள் நம் காதுகளை எட்டுவதில்லை. இன்னும் பல நோய்கள் தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வகையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரி இருப்பதில்லை. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு குறிப்பிட்ட நோயால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதுவும் 2019-க்கு பிறகு 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று தான் முன்னணியில் இருந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் இந்த கொரோனா தொற்றினால் அதிக உயிர்சேதம் ஏற்படவில்லை.
தற்போது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். எனவே 2023 ஆம் ஆண்டில் எந்த நோய்கள் எல்லாம் தலைப்புச் செய்தியில் இடம் பெற்று நீண்ட நாட்களாக பேசப்பட்டன என்பதை இப்போது காண்போம்.
மர்ம நிமோனியா
2023 ஆம் ஆண்டில் குழந்தைகளிடையே நிமோனியா வழக்குகள் அதிகமாக இருந்தன. இது நிபுணர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. அதுவும் சீனாவில் இந்த மர்ம நிமோனியாவில் மருத்துவமனைகளில் குழந்தைகள் குவிந்து இருந்தனர். இந்த நிமோனியா வழக்குகள் சீனாவில் மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் காணப்பட்டன. நிமோனியா பெரியவர்களையும் தாக்கும் என்றாலும், இநத மர்ம நிமோனியாவால் குழந்தைகள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டனர்.இந்த நிமோனியா வைரஸ் தொற்றினால் கழந்தைகள் இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று போன்ற அறிகுறிகளை அனுபவித்தனர். முக்கியமாக சீனாவில் இப்படி படிவும் நிமோனியாவைக் கண்டு, இந்தியாவில் உள்ள மக்களும் அச்சம் அடைந்தனர்.
திடீர் மாரடைப்பு
முன்னாள் பிரபஞ்ச அழகியான நடிகை சுஷ்மிதா சென் முதல் நடிகர் புனித் ராஜ்குமார் வரை ஏராளமான இந்திய பிரபலங்கள் 2023-ல் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவற்றில் அதிர்ஷ்டவசமாக சிலரே உயிர் பிழைக்க முடிந்தது. சொல்லப்போனால் உலகிலேயே இந்தியர்களுக்கு தான் கரோனரி தமனி நோயை உருவாக்கும் ஆபத்து அதிகம் உள்ளது.
ஏனெனில் இந்தியர்களின் தமனிகள் சற்று சிறியதாக இருக்கும். மேலும் இந்தியர்களின் மோசமான உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், ஃபாஸ்ட் புட், சிகரெட், அதிகப்படியான மன அழுத்தம், அதிகமாக மது அருந்துவது மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவையும் மாரடைப்பின் அபாயத்தை அதிகரிக்கின்றன.