இன்னொரு லொட்டரி சீட்டு வாங்க முயன்ற கனேடிய பெண்மணிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

கனடாவின் ஒன்ராறியோவில் புதிதாக இன்னொரு லொட்டரி சீட்டு வாங்க தனது கணக்கை திறந்த பெண் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

பெருந்தொகை பரிசு
ஒன்ராறியோவின் Richmond Hill பகுதியை சேர்ந்தவர் Mei Jiang. ஏற்கனவே ஒரு லொட்டரி சீட்டு வாங்கியவர், அதில் பரிசு கிடைத்ததா என்பதை அவர் பரிசோதிக்கவில்லை.

இந்த நிலையில், புதிதாக ஒரு சீட்டு வாங்க தமது கணக்கை திறந்துள்ளார். அப்போது தான், ஏற்கனவே வாங்கிய சீட்டில் பெருந்தொகை பரிசு கிடைத்துள்ளது அவருக்கு தெரிய வந்தது.

தன்னால் நம்ப முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள Mei Jiang, உடனடியாக அந்த சீட்டுடன் OLG அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஜனவரி 13ம் திகதி நடந்த இந்த குலுக்கலில் அவருக்கு 274,199.70 கனேடிய டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.

இந்த நிலையில், கணவர் வேலை முடித்து வீடு திரும்பியதும், நடந்தவற்றை தெரிவித்ததாகவும், ஆனால் அவர் நம்ப மறுத்ததாகவும் Mei Jiang தெரிவித்துள்ளார்.

லொட்டரியில் வென்ற பணத்தால் வீட்டு கடனை அடைக்க வேண்டும் என்றும், கணவருக்கும் தமக்கும் புதிய இரண்டு அலைபேசிகள் வாங்க வேண்டும் என்றும் Mei Jiang தெரிவித்துள்ளார். அத்துடன் நல்ல உணவு சாப்பிட்டு இந்த மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும் என்றும் Mei Jiang தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *