துருவப் பிரதேசக் கடலில் உலவும் பனிக் கரடி… 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் மாயாஜாலம் இல்லை. ஆனால், அதில் மயங்காதவர்களே இருக்க முடியாது. வேலை நெருக்கடியில் சோர்ந்து போய் இருக்கிறீர்களா ரிலாக்ஸ் செய்ய ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்க வாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் இன்று நேற்று உருவானது இல்லை. இது கி.மு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இருப்பதாக சான்றுகள் உள்ளன. கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆடிகல் இல்யூஷன் படத்தில் துருவப் பிரதேசக் கடலில் உலவும் பனிக் கரடி எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடி. இந்த சவால் மிகவும் கடினமானது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவும் இல்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காட்சிப் பிழை, ஆனால், மாயாஜாலம் இல்லை, ஒரு தந்திரம், ஆனால், தாந்ரிகம் இல்லை. ஆப்டிகல் இல்யூஷன் ஒரு புதிர் விளையாட்டு, உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, மூளையைக் குழப்பும் பெருங் குழப்பம், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து விடையைத் தேடினால் எளிதாக விடையக் கண்டுபிடித்துவிடலாம்.