ஏப்.17-ம் தேதியன்று பொது விடுமுறை..?
ராம நவமி பண்டிகை அடுத்த மாதம் 17-ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்காள அரசு ராம நவமி அன்று பொது விடுமுறை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மேற்கு வங்காள கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராம நவமியான ஏப்ரல் 17-ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ராமநாவமியின் போது ஹவுரா மற்றும் ஹுக்ளி மாவட்டங்களில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காள அரசு ராம நவமிக்கு பொது விடுமுறை அறிவிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.