தரமான பிளேயர் தான்.. ஆனா அவர் இல்லாமையும் இந்திய அணியால் ஜெயிக்க முடியும்.. டேல் ஸ்டைன் கருத்து
குறிப்பாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு இக்கட்டான சூழ்நிலையில் ஜெய்ஸ்வால் 209, சுப்மன் கில் 104 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார்கள்.
ஆனால் அவர்களை மிஞ்சி ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு தேவையான நேரங்களில் ஓலி போப், பென் ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்த பும்ரா மொத்தம் 9 விக்கெட்டுகள் சாய்த்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
அதன் காரணமாக தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார்.
தரமான வீரர் ஆனால்:
மேலும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வகையான ஐசிசி தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் பவுலர் என்ற உலக சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். அந்த வகையில் தற்சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியா வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு பந்து வீச்சு துறையில் அவர் இன்றியமையாத முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார்.