பாவனைக்கு தயாராகும் முதுமையை தடுக்கும் மருந்து: இலங்கை மருத்துவ துறையின் சாதனை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் ஆராய்ச்சி பீடத்தால், இலங்கையில் முதன்முறையாக முதுமையை தடுக்கும் ஊட்டச்சத்து மாத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாத்திரையானது, இயற்கையான மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளதகாகவும் தற்போது அந்த மூலப்பொருட்களை பற்றிய தகவல்களை வெளியிட முடியாது எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் பேராசிரியர் சமீர ஆர். சமரகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முதுமையை தடுக்கும் மாத்திரையானது நீண்ட கால ஆய்விற்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் அது பாவனைக்கு வெளிவர தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய மருந்து
அத்துடன், இந்த மாத்திரை இயற்கை ஆயுர்வேத முறைப்படி உருவாக்கப்பட்டிருப்பதால் இலங்கையின் ஆயுர்வேத திணைக்களத்திடம் உரிய அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் பீடத்தால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய மருந்து தற்போது சந்தையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.