டான்ஸ் கிளாஸ் செல்லும் செம்பருத்தி சீரியல் நடிகை; ‘கனவு நனவானது’ விஜய் உடன் புகைப்படம்

சீரியல் நடிகை ஷபானா டான்ஸ் கற்றுக்கொள்வதற்காக டான்ஸ் கிளாஸ் செல்லும் புகைப்படத்தை ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமல்ல, நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிடுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஷபானா. நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து செம்பருத்தி சீரியலில் நடித்த ஷபானாவுக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியின் விருது கிடைத்தது.
செம்பருத்தி சீரியலில் ஷாபானா தனது அமைதியான, அழகான நடிப்பால் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த சீரியலில் ஜோடியாக கார்த்தி – ஷபானா-வுக்கு ஏராளமான ரசிகர்கள் அதிகரித்தனர்.
ஜீ தமிழ் டிவியில் 2017 அக்டோபரில் ஒளிபரப்பாகத் தொடங்கிய செம்பருத்தி சீரியல் 2022 ஜூலையில் முடிவடைந்தது. 5 ஆண்டுகள் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் முடிவடைந்தாலும் ஷாபானா செம்பருத்தி சீரியல் நடிகையாகவே மக்கள் மனதில் பதிந்திருக்கிறார்.
செம்பருத்தி சீரியலைத் தொடர்ந்து, ஷாபானா தற்போது சன் டிவி-யில் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் நடித்து வருகிறார். பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்து வெற்றி நடைபோட்டு வருகிறது.
சீரியலில் பிஸியாக இருந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷபானா, தனது புகைப் படங்களையும் விடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்கள் உடன் உரையாடிக் கொண்டே இருக்கிறார்.
நடிகை ஷபானா, டான்ஸ் கற்றுக்கொள்வதற்காக டான்ஸ் கிளாஸ் செல்லும் முதல் நாள் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், முதல் நாள் டான்ஸ் கிளாஸ் சென்றதாக நடிகை ஷபானா குறிப்பிட்டுள்ளார், டான்ஸ் கிளாஸ் செல்ல ஆரம்பித்துள்ளேன். நான் ஒரு நல்ல டான்சர் அல்ல என்பது எனக்குத் தெரியும். அதை உணர்ந்ததால்தான் டான்ஸ் கிளாஸ் செல்கிறேன். நான் டான்ஸ் நன்றாக கற்றுக்கொள்ள நீண்ட நாள்கள் தேவைப்படும் என்பது எனக்கு தெரிந்துவிட்டது. ஆனால், நன்றாக கற்றுக்கொள்ள முயற்சிப்பேன். விரைவில் உங்களுக்கு என் டான்ஸ் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு விடியோ பதிவேற்றம் செய்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். டான்ஸ் கிளாஸ் செல்லும் ஷாபானாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஷபானா டான்ஸ் கிளாஸ் செல்கிறேன் என்று புகைப்படத்தை பதிவிட்ட அடுத்த பதிவில் நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் கனவு நனவானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த பதிவில், ‘இறுதியாக கனவு நனவானது, அண்ணனை பாத்துட்டேன்… மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பதை நான் நேற்று உணர்ந்தேன். ஆனால், ஒன்னு சொல்றேன், அவரை பார்த்ததற்கு அப்புறம், அவர் மேல் இருக்கும் அன்பும் மரியாதையும் 100 மடங்கு அதிகமாதான் ஆகியிருக்கு.. அவ்ளோதான் சொல்வேன்’ என்று ஷபானா பதிவிட்டுள்ளார்.
இதனால், டான்ஸ் கற்றுக்கொள்ள செல்வது, புத்தாண்டு தீர்மானமா? இல்லை சினிமாவில் புதிய பட வாய்ப்பா? என்று ரசிகர்கள் பலரும் ஷபானாவிடம் இன்ஸ்டாகிராமில் கம்மெண்ட் செய்து கேட்டு வருகின்றனர்.