2.56 லட்சத்திற்கு மேற்பட்ட கிராமிய தாக் சேவகர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் அமல்..!
லோக்சபா தேர்தல் 2024க்கு முன்னதாக, கிராமின் தக் சேவக்களுக்கான புதிய நிதி மேம்படுத்தும் திட்டத்தை தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது அவர்களின் சேவை நிலைமையை மேம்படுத்தவும், அவர்களின் தொழில் வாழ்க்கையின் தேக்க நிலையை போக்கவும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராமின் தாக் சேவக் 12, 24 மற்றும் 36 ஆண்டுகள் சேவையை முடித்தவுடன், ஆண்டுக்கு முறையே ரூ.4,320, ரூ.5,520 மற்றும் ரூ.7,200 என நிதி பெறுவார்கள்.
மேலும் இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வெளியிட்ட அறிக்கையில், கிராமின் டக் சேவக் நிதி மேம்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிராமிய அஞ்சல் அமைப்பில் கிராமீன் தாக் சேவகர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 2.5 லட்சத்திற்கும் அதிகமான கிராமீன் தாக் சேவகர்கள் அத்தியாவசிய நிதிச் சேவைகள், பார்சல் டெலிவரி மற்றும் பிற அரசு-குடிமக்களுக்கு தொலைதூரப் பகுதிகளில் சேவைகளை வழங்குகின்றனர். அவர்களுக்கான இந்த திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.