மாருதியின் புதிய எலெக்ட்ரிக் காரில் இப்படி ஒரு சேவையா? இதை யாருமே எதிர்பார்க்கலயே!

மாருதி நிறுவனம் தனது புதிய கார் போர்டிங் சேவைக்காக பூல்கார் (POOLKAR) என்ற பெயரை காப்புரிமைக்காக பதிவு செய்துள்ளது. இதுபோக எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் ஏற்று மையத்திற்காக சார்ஜிங் ஹப்(Charging HUB) என்ற பெயரையும் ஸ்மார்ட் சார்ஜ் (Smart Charge) என்ற பெயரையும் காப்புரிமைக்காக விண்ணப்பம் செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை நாம் காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் சமீபத்தில் போல் கார் சார்ஜ் ஹப் மற்றும் ஸ்மார்ட் சார்ஜ் ஆகிய பெயர்களுக்காக காப்புரிமைக்காக விண்ணப்பம் செய்திருந்தது. இது நிறுவனத்தின் விரைவில் வரப்போகும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான பெயராக இருக்கலாம் என தெரிய வருகிறது. மாதிரி நிறுவனம் தற்போது தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகிறது.

மாருதி நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் இந்நிறுவனம் ஏற்கனவே காட்சிப்படுத்தியிருந்த இவிஎக்ஸ் என்ற கான்செப்ட் காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கான பெயராக பூலிங் கார் என்ற பெயர் இருக்கலாம் என தெரிகிறது. இதுபோக இவி காரை சார்ஜ் ஏற்றும் மையங்களுக்காக சார்ஜ் ஹப் மற்றும் ஸ்மார்ட் சார்ஜ் ஆகிய பெயர்களை அந்நிறுவனம் தேர்வு செய்திருக்கலாம் என தெரிகிறது.

மாருதி நிறுவனம் இந்த பெயர்களுக்கான காப்புரிமையை கூறும் பட்சத்தில் நாம் மாருதி நிறுவனம் அடுத்த கட்டமாக தனது சொந்தமாக சார்ஜிங் ஸ்டேஷனுக்கு அமைக்கும் முயற்சியில் இறங்கப் போகிறது என்பதை தெளிவாக உணர முடிகிறது. ஸ்மார்ட் சார்ஜ் என்ற பெயர் இந்த புதிய சார்ஜிங் கட்டமைப்பிற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.

இது குறித்து மாருதி நிறுவனம் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஹுண்டாய் நிறுவனம் சமீபத்தில் 6 நகரங்களில் 11 அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக பிரத்தியேகமாக அறிவித்த நிலையில் உடனடியாக மாருதி நிறுவனம் தற்போது இந்த காப்புரிமைக்கான விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளது.

மாருதி நிறுவனம் ஆட்டோமொபைல் செக்டாரில் பலவிதமான புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் பூல்கார் என அந்நிறுவனம் பதிவு செய்துள்ள பெயர் மாருதி நிறுவனத்தின் புதிய சேவைக்கான பெயராக இருக்கலாம் என தெரிகிறது. மாருதி நிறுவனம் கார் பூலிங் சேவைகளை வழங்க திட்டமிட்டு இருக்கலாம் எனவும் அதற்காகத்தான் இந்த பெயரை பதிவு செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மாருதி நிறுவனம் இந்த சேவையை இந்தியா முழுவதும் தனது டெக்னாலஜி பார்ட்னர் உடன் சேர்ந்து வழங்க திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவின் பல பெரு நகரங்களில் ரைடு ஷேரிங் மற்றும் கார் பூலிங் சேவைகள் பெருமளவு பெருகி வருகின்றன. பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதை செய்து வருகின்றன.

சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களில் ரைடு ஷேரிங் முறையை அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படியாக மாருதி சுஸூகி பூலிங் கார் என்ற சேவையும் ரைடு ஷேரிங் சேவையாக இருக்கலாம் என தெரிகிறது. ஆனால் இது குறித்து மாருதி நிறுவனம் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மாதிரி நிறுவனம் தற்போது தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் ஏற்கனவே 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கார் முழுமையாக புரொடக்ஷன் மாடல் காராக மாற்றப்பட்டு விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியாக மாருதி நிறுவனம் கார்களை பகிர்ந்து பயணம் செய்யும் முறையை நடைமுறைக்கு கொண்டு வருவதால் பல சட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது இதற்கு முறையான சட்ட அனுமதி இருக்கிறதா என்ற விபரமே சரியாக தெரியாத நிலையில் இந்த பிசினஸை மாருதி நிறுவனம் நேரடியாக எடுத்து துவங்கப் போகிறது. இதற்கான சட்ட மாறுதல்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *