கனடாவில் மரணமடைந்த தந்தையின் வீட்டை சுத்தம் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மரணமடைந்த தன் தந்தையின் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த ஒரு கனேடிய பெண், தன் தந்தையின் அறையில் இருந்த ஒரு பொருளைக் கண்டு அதிர்ந்துபோய், உடனே பொலிசாரை அழைத்தார்.

தந்தையின் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த பெண்
கியூபெக்கிலுள்ள தன் தந்தையின் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தார் Kedrin Simms Brachman என்னும் பெண்.

ஸ்பேனர் போன்ற கருவிகளை வைத்திருக்கும் தன் தந்தையின் அறைக்குள் நுழைந்து, கருவி ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த அந்த பெண்ணின் கண்களில் பட்டது ஒரு பொருள். அது ஒரு கையெறிகுண்டு.

உடனடியாக Kedrin பொலிசாரை அழைக்க, பொலிசார் தங்கள் உயர் அதிகாரிகளின் உதவியை நாட, அவர்கள் கனேடிய ராணுவத்தை அழைக்க, சிறிது நேரத்தில் அந்த பகுதியே பரபரப்பாகியுள்ளது.

30 ஆண்டுகளுக்குப் பின்னும் வெடிக்கும் நிலையிலிருந்த குண்டு
கனேடிய ராணுவ அதிகாரிகள் சிலர் Kedrinஉடைய வீட்டுக்கு விரைந்து, அந்த கையெறிகுண்டை சோதனையிட, அது வெடிக்கும் நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு அவ்வப்போது இப்படி அழைப்புகள் வரும். ஆனால், அப்போதெல்லாம் பெரும்பாலும் எங்களுக்கு பழைய, வெடிக்கும் தன்மையை இழந்த குண்டுகள்தான் கிடைக்கும்.

ஆனால், இந்த குண்டு இன்னமும் வெடிக்கும் திறனுடனேயே உள்ளது, அதை நீங்கள் தொடாமலிருந்தது நல்ல விடயம் என்று கூறியுள்ளனர் ராணுவத்தினர்.

அவர்கள் அந்த குண்டை எடுத்துச் சென்றபிறகே நிம்மதிப்பெருமூச்சு விட்ட Kedrin, தன் தாத்தா கலைப்பொருள் போல அதை நீண்ட நாட்களாக பாதுகாத்துவைத்திருந்ததாகவும், பின்னர் அவரிடமிருந்து அந்த கையெறிகுண்டை தன் தந்தை வாங்கிவைத்திருக்கலாம் என்றும், எப்படியும் அது 30 ஆண்டுகளுக்கு முன் உள்ள குண்டாக இருக்கக்கூடும் என்றும், அதை வீட்டை விட்டு அகற்றினால் போதும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்ததாகவும் தெரிவிக்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *