குளிரை விரட்ட ஒரு குறுக்கு வழி: சிரித்து தீர்க்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ
வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.
இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.
மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு வழியை தேடிவிடுகிறோம். அந்த வழி நிரந்தரமான வழியாக இருந்தாலும் சரி, தற்காலிகமான குறுக்கு வழியாக இருந்தாலும் சரி, அந்த நேரத்திற்கு ஒரு தீர்வை தேட யாரும் தாமதிப்பதில்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் குறுக்கு வழிகள் இல்லாமல் பலருக்கு பல வேலைகள் நடந்து முடியாது. இப்படிப்பட்ட வழிகளை நாம் குறுக்கு வழி என்று வேடிக்கையாக கூறினாலும், இவற்றைபற்றி யோசிப்பதற்கும் புத்திசாலித்தனம் வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பல வித ஷார்ட் கட் மூலம் தங்கள் அன்றாட பணிகளை எளிதில் செய்து முடிக்கிறார்கள். இப்படிப்பட்ட பல வேடிக்கையான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிரப்படுகின்றன. அவை பெரும்பாலும் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாமும் இந்த வழிகள் மூலம் நமது வேலைகளை எளிதாக்கிக்கொள்ளலாமே என இவற்றை பார்த்து நமக்கு தோன்றுவதுண்டு. தற்போதும் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
ஆனால், இது எந்த வேலைக்குமான குறுக்கு வழியல்ல. இது குளிரிலிருந்து காத்துக்கொள்வதற்கான குறுக்கு வழியாகும். இந்த வீடியோவை பார்த்தால், பார்ப்பவர்களால் சிரிப்பை நிறுத்த முடியாது.
இந்த வீடியோவில் ஒருவர் கம்பளிகளின் குவியலுக்கு அடியில் படுத்திருப்பதை காண முடிகின்றது. கவனமாக பார்த்தால், கம்பளிகளுக்கு அடியில் ஒரு பாக்ஸ் இருப்பது தெரிகிறது. அந்த பாக்சில் அவர் படுத்துள்ளார். அந்த பாக்ஸுக்கு ஒரு மூடியும் உள்ளது. அதை இறுதியில் அவர் மூடி விடுகின்றார். அந்த நபர் இரண்டு காரணங்களுக்காக இதை செய்கிறார். ஒன்று இதன் மூலம் அவர் குளிரிலிருந்து தப்பிக்க முடியும், மற்றொன்று இதன் மூலம் அவர் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது. எந்த தொந்தரவும் இல்லாமல் அவர் நிம்மதியாக சிறிது நேரம் ஓய்வெடுக்க முடியும்.
குளிரை விரட்ட குறுக்கு வழி தேடிய நபரின் வீடியோவை இங்கே காணலாம்
— Figen (@TheFigen_) December 18, 2023
இணையத்தில் வீடியோ வைரல் ஆனது
இந்த சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் @TheFigen_ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு இதுவரை 90 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
“குளிர்காலத்தில் யாரும் தொந்தரவு செய்யாமல் சோம்பேறியாக யாருக்காவது தூங்க வேண்டுமா? இவரை போல் செய்யலாம்” என ஒரு பயனர் எழுதியுள்ளார். “வட இந்தியாவில் குளிர் அதிகமாகி வருகிறது. அதற்கு இது சரியான வழிதான்” என மற்றொரு பயனர் கூறியுள்ளார்.