இதே மாதிரி 1993 டெஸ்டில் நடந்த சம்பவம்.. பதிலடி தந்த இங்கிலாந்து.. இந்தியா என்ன செய்தது தெரியுமா?
இவர் தான் டெஸ்டுக்களில் விளையாடி, முதல் நடுவர் என்ற பெருமைக்கு உடையவர் ஆவார்.இந்த முதல் டெஸ்ட் ( 1992 – 93 ) இங்கிலாந்து அணியின் சுற்றுப் பயணத்தில் ஜனவரி, 29, 1993 ல் துவங்கியது.
இந்திய அணியின் கேப்டன் மொஹம்மத் அசாருதின் ( Mohammad Azharuddin )
டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று முடிவு செய்தார்.
மனோஜ் பிரபாகர் மற்றும் நவ்ஜோத் சித்து இந்திய அணியின் ஆட்டத்தை துவக்கினர்.
இங்கிலாந்து அணியின் தரப்பில் வேக பந்து வீச துவங்கியவர்கள் தேவோன் மல்கம் ( Devon Malcolm) மற்றும் பால் ஜார்விஸ். ( Paul Jarvis )ஒப்பனர்ஸ் இருவரும் நிதானமாகவும், அடித்தும் ஆடினர். இந்திய அணி யி ன் ஸ்கோர் 49 ஐ தொட்டதும், முதல் விக்கெட்டை இழந்தனர்.
சித்து அவுட் (13 ரன்கள் ) கேட்ச் பிடித்தது ஹிக். (Hick ) பந்து வீசியது தேலர் ( Taylor ).
மனோஜ் பிரபாகர் , வினோத் காம்பளி ஜோடி ஆட்டத்தை தொடர்ந்தனர்.
வினோத் காம்ளி 16 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
ஸ்கோர் 78 – 2 . மனோஜ் பிரபாகர் ஆட்டம் இழக்கும் போது ஸ்கோர் 93.
அவர் எடுத்தது 46 ரன்கள். 3 பவுண்டரிகள். இவர் கொடுத்த கேச்சை பிடித்தவர் லெவிஸ் ( Lewis ) பவுலர் சலிஸ்புரி (Salisbury)அடுத்து இரண்டு முக்கிய ஆட்டக் காரர்கள் ஜோடி சேர்ந்து அவர்களுடைய அட்டகாசமான. ஆட்டங்களை வெளிப் படுத்தினர்.
சச்சின் டெண்டுல்கர் , அசாருதின் இருவரும் ஜோடியாக 123 ரன்கள் சேர்த்தனர்.
டெண்டுல்கர் 50 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார், மல்கம் பந்தில். கேட்ச் பிடித்தவர் ஹிக்.
118 பந்துக்களை எதிர் கொண்ட இவர் அடித்தது 6 பவுண்டரிகள்.
அடுத்து ஆட களம் இறங்கியவர், அசாருதின் போல அவரது முதல் அறிமுக டெஸ்டில் சதம் எடுத்த பிரவின் அம்ரே ( Pravin Amre ).
இருவரும் முதல் நாள் முடிவு வரையில் ஆடிக் கொண்டு இருந்தனர்.
அசாருதின் தனது சதத்தை அடித்தார்.அசாருதின் 114* நாட் அவுட் , பிரவின் அம்ரே 7* நாட் அவுட்அன்றைய ஆட்ட இறுதி ஸ்கோர் 4 விக்ட்டுக்கள் இழப்பிற்கு 263 ரன்கள்.
இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்தது.
விரைவில் பிரவின் அம்ரே அவுட். 12
ரன்கள். இந்திய அணியின் ஸ்கோர் 278 – 5.கேட்ச் ஹிக், பவுலர் ஜார்விஸ். அம்ரே எதிர் கொண்டது 74 பந்துகள்.
அடுத்து பேட்டிங் ஆட வந்த கபில் தேவ் 50 பந்துக்கள் விளையாடி எடுத்த ரன்கள் 13.
இவர் அவுட் ஆகும் பொழுது ஸ்கோர் 346 – 6. கபில் தேவ், ஹிக் வீசிய பந்தில், லெவிஸ் கேட்ச் பிடிக்க , அவுட் ஆனார்.இந்திய அணி ஸ்கோர் 362 இருக்கும் சமயத்தில் இந்திய அணி
கேப்டன் அசாருதின் அடித்த பந்தை , இங்கிலாந்து அணி கேப்டன் கிரஹம் கூச் பிடிக்க, முடிவுக்கு வந்தது.
அசாருதின் விக்கெட்டை வீழ்த்தியவர், கிரேமே ஹிக் ( Graeme Hick ).
ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகள் எடுத்தார்.
இவரது ஸ்கோர் 182 ரன்கள்.விளையாடிய பந்துக்கள் 197.
ரசிகர்களுக்கு அசாருதினின் பல் வேறு பேட்டிங்கை காண வாய்ப்பு கிட்டியது.
நின்றும், அதே சமயத்தில் டீமிற்கு தேவையான ரன்களை குவிப்பதில் இவர் வல்லவர் என்பதை இந்த ஆட்டத்திலும் ஆடி காட்டினார், இந்த கேப்டன்.இவர் அவுட் ஆனதும் குறைந்த கூடுதல் ரன்களில், ஆல் அவுட் ஆனது இந்திய அணி.
முதல் இன்னிங்ஸ் ரன்கள் 371.
அணில் கும்ப்ளே ( 0 )
ராஜேஷ் சவுகான் ( 2 )
வெங்கடபதி ராஜு ( 1 )
விக்கெட் கீப்பர் கிரண் மோரே (4*) (நாட் அவுட் )
உபரி ரன்கள் ( Extras ) 32
இங்கிலாந்து அணி தரப்பில் பவுலிங் செய்தவர்களின் பங்களிப்பு
தேவோன் மல்கம் ( 4 – 67 )
ஜி ஹிக் ( 3 – 19 )
பால் ஜார்விஸ் ( 2 – 72 )
கூச், அலெக் ஸ்டுவார்ட், மைக் காட்டிங், ராபின் ஸ்மித், ஜி ஹிக் போன்ற சிறந்த
பேட்ஸ்மேன்களை கொண்ட , இங்கிலாந்து அணி நம்பிக்கையுடன் அவர்களது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை துவங்கியது.
ஆனால் நடந்ததோ வேறு.மள மள வென்று அவர்கள் விக்கெட்டுக்கள் சரிய தொடங்கின.
கூச் மற்றும் ஸ்டுவார்ட் இருவரும் இங்கிலாந்து டீமின் பேட்டிங்கை துவக்கினர்.
இந்திய அணி பவுலிங்கை துவக்கியவர்கள் கபில் தேவ், மனோஜ் பிரபாகர்.
8 ரன்கள் ஸ்கோர் இருக்கும் பொழுது அலெக் ஸ்டுவார்ட் விக்கெட்டை வீழ்த்தினார், பிராபாகர்.ஸ்டுவார்ட் ஸ்கோர் எதுவும் செய்ய வில்லை.
பூஜ்ஜியம் (0). எதிர் கொண்டது ஒரே ஒரு பந்து மட்டும் தான்.
விரைவில் ஸ்பின் பவுலர்கள் தங்களது திறமைகளை காண்பிக்க தொடங்கினர்.