அவசரப்பட்டு பேட் கம்மின்ஸ் எடுத்த ஒற்றை முடிவு: 27 ஆண்டு சாதனையை கோட்டைவிட்ட சம்பவம்!

சர்வதேச அளவில் கிரிக்கெட் மீதான மோகத்தினை அதிகப்படுத்திய அணி என்றால் அது வெஸ்ட் இண்டீஸ் அணிதான். அந்த அணி குறித்து இன்றுவரை உள்ள பொதுவான அபிப்ராயம் ‘ வெஸ்ட் இண்டீஸ் டீம்லதான் 11 பேரும் பேட்ஸ்மேன்ஸ்’ என்பதுதான்.

ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் ஒரு அணி வெற்றி பெற கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் தேவை என்றால் அணியில் இருக்கும் முக்கிய விக்கெட்டுகள் அனைத்தும் வீழ்த்தப்பட்ட பின்னரும் கடைசி விக்கெட்டாக களத்தில் ஏதேனும் ஒரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் இருந்தால் அவரால் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட முடியும் என்ற நம்பிக்கை தானாக எழுந்தி விடுகின்றது. இப்படியான நம்பிக்கையை ஏற்படுத்தும் அணி வீரர்களால் ஒரு அணியாக தற்போது சிறப்பாக விளையாட முடியவில்லை என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

அதிலும் சர்வதேச போட்டியோ அல்லது ஐசிசி போட்டிகளோ வெஸ்ட் இண்டீஸ் அணி மீது மற்ற அணிகளுக்கு உள்ள எண்ணம், டி20 போட்டி என்றால் அதிக கவனம் தேவை. அதுவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி என்றால் நாமெல்லாம் எதுவும் செய்யத்தேவையில்லை, அவர்களே நமக்கு வெற்றியை பெற்றுத்தந்துவிடுவார்கள் எனும் அளவிற்கு இவர்களது ஆட்டம் உள்ளது.

அதேபோல் கிரிக்கெட்டில் கடந்த சில சதாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் அணி ஆஸ்திரேலியா. இந்த அணி தனது நாட்டில் மட்டும் இல்லாமல் உலகின் எந்த நாட்டிற்குச் சென்றாலும் கோப்பையை தட்டி வரும் வல்லமை படைத்தவர்களாக உள்ளனர்.

இப்படியான ஆஸ்திரேலியா அணியின் சொந்த மண்ணில் அவர்களை 27 ஆண்டுகளுப் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட அட்டவணைப் படுத்தப்பட்டது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த 25ஆம் தேதி தொடங்கியது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *