அடர்ந்த மரங்களில் மறைந்திருக்கும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தில் எக்கச்சக்கமாக வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி லட்சக் கணக்கான நெட்டிசன்கள் படையெடுத்து வருகிறார்கள். வெறித்தனமாக விடையைக் கண்டுபிடிக்கிறார்கள். அதற்கு காரணம், ஆப்டிகல் இல்யூஷனில் உள்ள சுவாரசியம்தான். அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அடர்ந்த மரங்களில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல. முயற்சி செய்து பாருங்கள், உங்கள் கெட்டிக்காரத் தனத்தை இந்த உலகம் அறியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக பார்த்தால் அது விளையாட்டாக மட்டுமே தெரியும். ஆனால், அதை ஒரு தத்துவக் கோணத்திலும் பார்க்கலாம்.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற பாடல் வரிகள் கவிஞர் மருதகாசி எம்.ஜி.ஆர் நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆப்டிகல் இல்யூஷனுக்கும் பொருந்தும். ஸ்மார்ட்டாக யோடித்து தேடினால் மட்டுமே ஆப்டிகல் இல்யூஷனில் எளிதாக விடைகளைக் கண்டுபிடிக்க முடியும்.