ஒரு ஸ்பூன் நெய் இருந்தால் உடலை வெள்ளையாக்கும் கிரீம் ரெடி!
ஒரு ஸ்பூன் நெய் இருந்தால் உடலை வெள்ளையாக்கும் கிரீம் ரெடி!
நிறத்தை வைத்து அழகை தீர்மானிக்கும் வழக்கம் காலம் காலமாக நடந்து வருகிறது.
இதனால் உடலை வெள்ளையாக்க தீங்கு விளைவிக்க கூடிய க்ரீம், பவுடரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். இதனால் சருமத்தில் பல வித பிரச்சனைகள் தான் ஏற்படும்.
சருமம் பாதிக்காமல் நிறத்தை வெள்ளையாக்க வேண்டும் என்றால் அதற்கு இயற்கை வழியில் தீர்வு காண்பது நல்லது.
தேவையான பொருட்கள்
*பசு நெய்
*குளிர்ந்த நீர்
ஒரு அகலமான செம்பு தாம்பூலம் எடுத்து அதில் தேவையான அளவு நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு செம்பில் குளிர்ந்த நீர்(ஐஸ் நீர்) நிரப்பி வைத்துக் கொள்ளவும். அதேபோல் ஒரு செம்பு உலோகத்தால் ஆன செம்பை எடுத்துக் கொள்ளவும்.
முன்னதாக தாம்பூலத்தில் நெய் ஊற்றி வைத்துள்ளோம் அல்லவா… அந்த நெய் மீது இந்த செம்பை வைத்து நன்கு தேய்க்கவும். கடிகாரம் சுற்றும் திசையில் அந்த செம்பை நெய் மீது வைத்து தேய்க்கவும்.
நெய் தாம்பூலத்தில் ஓடினால் சிறிது குளிர்ந்த நீர் சேர்த்து மீண்டும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தேய்த்துக் கொண்டே இருந்தால் நெய் வெண்ணையாக மாறும்.
வெண்ணெய் பதத்திற்கு வந்த பின்னர் மீண்டும் குளிர்ந்த நீர் சேர்த்து தேய்க்கவும். இவ்வாறு செய்வதினால் வெண்ணெய் க்ரீம் பதத்திற்கு வரும்.
இந்த க்ரீமை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும். தினமும் இந்த க்ரீமை கை, கால், முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் அப்ளை செய்து வந்தால் தோலின் நிறம் மாறும். தோல் மிகவும் மிருதுவாக இருக்கும்.