ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் முத்தழகு.! 39 வயதிலும் மாடர்ன் போட்டோஷூட்.
தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனை தொடர்ந்து அது ஒரு கனாக்காலம், பருத்திவீரன், போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
நடிகை பிரியாமணி பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கண்ணடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.
அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மார்டன் ட்ரெஸில் மாடலாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.