வெறும் 10 நிமிசத்துல சூப்பரான குருமா : இந்த ரெசிபிய மிஸ் பண்ணாதீங்க.
தேவையான பொருட்கள்
1 பெரிய வெங்காயம்
1 தக்காளி
6 பல் பூண்டு
கொஞ்சம் இஞ்சி
எண்ணெய் 2 ஸ்பூன்
கொஞ்சம் கருவேப்பிலை
1 பச்சை மிளகாய்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
அரை ஸ்பூன் மல்லித் தூள்
உப்பு
கால் ஸ்பூன் மஞ்சள்
2 உருளைக்கிழங்கு
கால் மூடி தேங்காய்
1 ஸ்பூன் சோம்பு
செய்முறை: ஒரு மிக்ஸியில் வெங்காயம் நறுக்கியது, தக்காளி, பூண்டு, இஞ்சி சேர்த்து அரைத்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து இந்த விழுதை நன்றாக வதக்கவும். தொடர்ந்து இதில் கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து மிளகாய் பொடி, உப்பு, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி சேர்க்கவும். இதை நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
இதையும் வதக்கவும். தொடர்ந்து இதில் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு எடுக்கவும். தொடர்ந்து மிக்ஸியில் சோம்பு, தேங்காய் சேர்த்து அரைக்கவும். குக்கர் இதை கொட்டி 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடவும்.