கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்! கார்த்திகை தீபம் சீரியல்

மிழ் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் ரூபாஸ்ரீ ஏற்பாடு செய்த இன்கம் டேக்ஸ் ரைடில் இருந்தும் கார்த்திக் தப்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கார்த்திக் வீட்டிற்கு வந்ததும் அபிராமி நீ எதுக்கு ரோடுல இறங்கி ரவுடிகளுடன் சண்டை போடுற, தர்ணா செய்யுற? இதனால் நம்ம குடும்ப கவுரவம் தான் கெட்டு போகும் என்று சொல்ல கார்த்திக் இல்லமா நம்ம குடும்பத்தில் இருந்து ஒரு பாடகி உருவாகினால் அது நமக்கு பெருமை தான் என்று சொல்கிறான்.

அடுத்ததாக ரூமுக்குள் இருக்கும் தீபாவிற்கு கார்த்திக் காரில் இருந்து ஒரு கிஃப்ட்டை கொண்டு வந்து கொடுக்க அது கல்யாண போட்டோவாக இருப்பதை பார்த்து தீபா சந்தோசப்படுகிறாள். மறுபக்கம் மாயாவும் ரூபஸ்ரீயும் கூட்டு சேர்ந்து தீபா பாடுவதை எப்படி தடுப்பது என்று யோசிக்கின்றனர். கடைசியில் ஐஸ்வர்யாவை வைத்து ஒரு பிளானை போட்டு ஒரு மயக்க மருந்து மாத்திரையை கொடுத்து அனுப்ப ஐஸ்வர்யா அதை கொண்டு வந்து அவளது அம்மாவிடம் கொடுக்கிறாள்.

… 35 வருஷம்.. மீண்டும் பாலிவுட்.. ரஜினி வில்லனுக்கு ஜோடியாகும் குஷ்பு..!

பிறகு தீபாவுக்காக மீனாட்சி ஸ்பெஷலாக பாலை காய்ச்சி கொண்டிருக்கும் போது அபிராமி கூப்பிட மீனாட்சி வெளியே வர இந்த நேரம் பார்த்து கிச்சனில் நுழையும் ஐஸ்வர்யாவின் அம்மா அந்த மாத்திரையை பாலில் கலந்து விடுகிறாள். பிறகு மீனாட்சி இந்த பாலை கொண்டு போய் தீபாவுக்கு கொடுக்கிறாள்.

தீபாவும் பாலை குடிக்க போகும் சமயத்தில் தர்மலிங்கம் போன் செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? தீபா பாலை குடிப்பாளா? இல்லையா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

ஏ.சி.திருலோசந்தர் ஹாலிவுட்டின், கம் செப்டம்பர் (1961) படத்தைத் தழுவி ஒரு கதையை எழுதினார். நாயகனாக எம்ஜி ராமச்சந்திரனை மனதில் வைத்து எழுதிய அந்தக் கதையில், எம்ஜி ராமச்சந்திரனின் வழக்கமான படங்களில் இடம்பெறும் சென்டிமெண்ட் காட்சியோ, அடிதடியோ இல்லை. எனினும், கதையை கேட்டதும் எம்ஜி ராமச்சந்திரன் நடிக்க ஒப்புக் கொண்டார். ஏவிஎம் படத்தைத் தயாரித்தது. அதுதான் அன்பே வா திரைப்படம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *