புதரில் பதுங்கியிருக்கும் புலி… 4 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்ச செம ஷார்ப் பாஸ்!
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்தில் நெட்டிசன்கள் இடையே அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. நெட்டிசன்களை ஒரு முடிவில்லாத சுவாரசியத்தில் மூழகடித்துக் கொண்டிருக்கிறது. சிறியவர்கள் பெரியவர்கள் வரை எல்லாத் தரப்பினரும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று விளையாடி வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் பதுங்கியிருக்கும் புலியை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். ஏனென்றால் கூர்மையான பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு ஒளியியல் மாயை. மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணம், ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். மகாகவி பாரதி போல கவித்துவமாக சொல்ல வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தோற்ற மயக்கம், காட்சிப்பிழை என்று கூறலாம்.