தலையெழுத்தை மாற்றி, விருப்பங்களை நிறைவேற்றும் மரம்…காணிக்கையாக கடிகாரம் வழங்கும் விநோதம்
இந்தியாவில் எத்தனையோ கோவில்கள் உள்ளன. இவற்றில் பல கோவில்கள் பல அற்புதங்கள் நிறைந்தவையாகும். ஆனால் கோவிலில் அல்ல, கோவிலுக்கு அருகில் உள்ள மரத்தை வணங்கினால் தலையெழுத்தே மாறும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு கோவில் இந்தியாவில் தான் உள்ளது. இந்த விநோத மரம் எங்குள்ளது, இந்த கோவிலில் அப்படி என்ன சிறப்பு என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தலையெழுத்தை மாற்றும் கோவில் :
மாற்றம் ஒன்றே மாறாதது…எதையும் மாற்றும் சக்தி காலத்திற்கு உள்ளது என்று எல்லாம் பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டிருப்போம். ஆனால் தலையெழுத்தை மாற்றி, கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் கோவில் ஒன்று நம்முடைய இந்தியாவில் உள்ளது. இந்த கோவிலில் வந்து வேண்டிக் கொண்டு, தங்களின் விருப்பங்கள் நிறைவேறிய மக்கள், காணிக்கையாக பலவிதமான கடிகாரங்களை வாங்கி வந்து கோவிலுக்கு அருகில் உள்ள மரத்தில் கட்டி தொங்க விடும் விநோதமும் இந்த கோவிலில் காலம் காலமாக நடந்து வருகிறது.
காலத்தை நிர்ணயிக்கும் உஜ்ஜைனி :
மத்திய பிரதேசமத்தில் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள கால பைரவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். உஜ்ஜைனி நகரத்தை அடிப்படையாக வைத்து தான் ஒரு காலத்தில் சர்வதேச நேரமே கணக்கிடப்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு பிறகு தான் சர்வதேச நேரம் லண்டனின் க்ரீன்விச் நகரை மையாக கொண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள குரதியாசங்கா என்ற கிராமத்தில் மஹித்பூர் – உன்ஹில் இடையேயான சாலையை ஒட்டி ஒரு கோவில் அமைந்துள்ளது. இது உஜ்ஜைனி நகரில் இருந்து 45 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது.