சிக்கன் மட்டனை விட பல மடங்கு ஊட்டச்சத்து மிக்க சைவ உணவு! பலாக்கொட்டைக்கு ஈடுஇணை இருக்கா?
முக்கனிகளில் ஒன்று பலா என்பதும், அதன் சுவையும் மணமும் அனைவருக்கும் தெரியும். ஆனால், பலாப்பழத்திற்குள் இருக்கும் அதன் பலாக்கொட்டைக்குள் ஊட்டச்சத்து சுரங்கமே இருப்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுவாக, பலாப்பழத்தை சாப்பிட்ட பின் அதன் கொட்டையை தூக்கி எறிந்துவிடுவார்கள். பலாப்பழ விதைகளில் உள்ள புரதம், அசைவ உணவுகளில் இருப்பதைவிட அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சைவ புரதத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை செய்யும் புரதத்தைக் கொண்டிருக்கும் பலாக்கொட்டையை அடிக்கடி உட்கொள்வது எலும்பு மற்றும் தசைகளின் வலிமையை அதிகரிக்கும். பலாப்பழத்தில் புரதம் உடபட பல்வேறு ஊட்டத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, நமது தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை.
பலாப்பழ கொட்டையில் புரதம், வைட்டமின் ஏ, சி, தியாமின், பொட்டாசியம், கால்சியம், ரிபோஃப்ளேவின், இரும்பு சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. பலாப்பழத்தை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை விரிவாக அறிந்து கொள்வோம்.
100 கிராம் பலாப்பழ விதையில் உள்ள சத்துக்கள் இவை..
புரதம் – 7.04 கிராம், ஃபைபர் – 1.5 கிராம், கார்போஹைட்ரேட்டுகள் – 38.9 கிராம், இரும்பு – 1.5 மி.கி மற்றும் சோடியம் – 63.2 மி.கி.
பலாக்கொட்டை எலும்புகள் வலுப்பெறும்
பலாப்பழ விதைகளை உட்கொள்வதன் மூலம் பலவீனமான எலும்புகளை வலுப்படுத்தலாம். இதில் எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் மெக்னீசியம் கணிசமான அளவில் உள்ளது. கால்சியத்தை உறிஞ்சும் திறன் அதிகமாக உள்ள பலாக்கொட்டையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது எலும்புகள் வலுவாக இருக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பலாக்கொட்டை
பலாப்பழ விதைகளில் கணிசமான அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. நமது உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் பலாக்கொட்டை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே பலாக்கொட்டையை வழக்கமான உணவில் சேர்த்துக் கொண்டால் பல வகையான நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு எதிர்ப்புக்கு பலாக்கொட்டை
பலாக்கொட்டையை அவ்வபோது உணவில் சேர்த்துக் கொண்டால், நீரிழிவு நோயைத் தவிர்க்கலாம். நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள பலாக்கொட்டை, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். பலாப்பழத்தில் இனிப்புத்தன்மை இருப்பதால் அது சர்க்கரை நோயை அதிகரிக்கும் என்றால், அதற்குள் இருக்கும் கொட்டை, நீரிழிவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
பலாப்பழத்தின் கொட்டையை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதை உட்கொள்வதன் மூலம், எலும்புகளைப் பலப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இருந்தாலும், இதில் வாயுத்தன்மை அதிகமாக இருப்பதால், பலாக்கொட்டையை சமைக்கும்போது அதை வேகவைத்து வடித்து பின் சமைப்பது நல்லது. அதேபோல மாவுத்தன்மை அதிகம் கொண்டது பலாக்கொட்ட்டை என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்.