சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை கடத்திய உறவினர்கள்.. பதறிய காதல் கணவன்..!
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இவர், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அதே கிராமத்தில் வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த நர்மதா என்ற பெண்ணை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் பெண்ணின் பெற்றோர் அம்பலூர் காவல் நிலையத்தில் தங்கள் மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தியாகு, நர்மதாவை டிசம்பர் 7-ஆம் தேதி கண்டுபிடித்து வாணியம்பாடி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தினர். பின்னர், அந்த பெண்ணின் விருப்பப்படி, நர்மதாவை அவரது கணவர் தியாகுவுடன் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் தியாகுவை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தியாகு உயிருக்கு ஆபத்து உள்ளதால் மனைவியுடன் தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு தியாகு சொந்த ஊரான சங்கராபுரம் பகுதிக்கு சென்றார். தியாகு வீட்டிற்கு வந்ததை அறிந்த நர்மதாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் தியாகுவின் வீட்டிற்கு சென்று தியாகு மற்றும் அவரது பெற்றோரை தாக்கி நர்மதாவை கடத்திச் சென்றனர்.
இதையடுத்து தியாகு அம்பலூர் காவல் நிலையத்தில் தனது மனைவி நர்மதாவை அவரது உறவினர்கள் கடத்திச் சென்றதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து நர்மதாவை தேடி வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிறப்புப் படை போலீஸார் நர்மதாவை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள நர்மதாவின் தந்தை உட்பட 5 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.