56 ஆண்டுகளாக இறந்த கருவை வயிற்றில் சுமந்த பெண்., கல்லாக மாறிய குழந்தை
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி வயிற்றில் ஸ்கேன் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பிரேசிலை சேர்ந்த இந்த 81 வயது மூதாட்டி 56 ஆண்டுகளாக இறந்த கருவை சுமந்துள்ளார். நம்புவதற்கு ஆச்சரியமாகத் தோன்றினாலும் அது உண்மைதான்.
இதற்கு முன்பு அவர் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால் அதன்பிறகு அவள் வயிற்றில் இன்னொரு இறந்த கரு இருப்பதை அறியாமல் வாழ்ந்து வந்துள்ளார்.
டானிலா வேரா (Daniela Vera) என்ற அப்பெண் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்காக முதலில் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டார்.
பின்னர், அந்த மூதாட்டிக்கு பலமுறை பரிசோதனை செய்த வைத்தியர், வயிற்றில் கல் போன்ற ஒன்று இருப்பதைக் கண்டறிந்து பாரிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.
அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்கு பரிசோதனை செய்து அதிர்ச்சி அளித்தனர்.
ஏற்கனவே ஏழு குழந்தைகளுக்கு தாயான இவர், கடந்த 1968ம் ஆண்டு கர்ப்பமாகியுள்ளார். ஆனால் இறந்துவிட்ட அந்தக் குழந்தையை கடந்த 56 ஆண்டுகளாக வயிற்றில் சுமந்து வந்துள்ளார்.
உள்ளே குழந்தையின் உடல் கல்லாக மாறியது. ஆனால் அது அவருக்கு தெரியவே இல்லை. இதை 3டி ஸ்கேன் மூலம் கண்டறிந்த வைத்திராக்கள், மூதாட்டியின் வயிற்றில் இருந்த கல் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
அறுவை சிகிச்சைக்கு மறுநாள் ஐசியூவில் மூதாட்டி கடைசி மூச்சை விட்டுள்ளார்.
இந்த அபூர்வ ‘கல் குழந்தை’ மூதாட்டியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கல் குழந்தை (Stone Baby) என்றால் என்ன?
வயிற்றில் இறந்த கருவை உடலால் வெளியேற்ற முடியாமல் போகும்போது, அதைச் சுற்றி கால்சியம் பூச்சு உருவாகத் தொடங்குகிறது.
மெல்ல மெல்ல இறந்த கரு கடினமாகி கல்லாக மாறிவிடும். இந்த மருத்துவ நிலை லித்தோபீடியன் (lithopedion) அல்லது stone baby என்று அழைக்கப்படுகிறது.