2 பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்த பெண்..அடுத்து நேர்ந்த பரிதாபம்
தமிழக மாவட்டம் ராணிப்பேட்டையில் பெண்ணொருவர், தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவருடன் சண்டை
ராணிப்பேட்டை மாவட்டம் வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (39). இவர் ஓய்வு பெற்று ராணுவ வீரர் ஆவர். இவருக்கும் இரண்டாவது மனைவி வெண்ணிலாவுக்கும் (28) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கணவன் – மனைவியிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மனமுடைந்த வெண்ணிலா தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
பிள்ளைகளுடன் தற்கொலை
இதனையடுத்து அவர் தனது மகள்கள் ஜெனிஸ்ரீ (6), தார்மீகா (4) ஆகியோரை அழைத்துக் கொண்டு வாலாஜா ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்ததில் மூவரும் ரயில் ஏறி பலியாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பொலிஸார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிள்ளைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.