உதகையில் தேனீர் கடைக்கு வாங்கிய ஆவின் பாலில் மிதந்த புழு..!

உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள தேனீர் கடையில் கடையின் உரிமையாளர் உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையில் இருந்து ஆவின் பால் பாக்கெட்டை வாங்கி உள்ளார்.இதனைத் தொடர்ந்து கடைக்கு வந்து பாலை சூடு செய்வதற்காக பாத்திரத்தில் பாக்கெட்டை பிரித்து கொட்டியுள்ளார். அப்போது பால் முழுவதும் வெள்ளை புழுக்கள் மிகுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்பு அதிகாரி பாக்கெட் மட்டும் பாலில் உள்ள புழுக்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பாக்கெட்டை சோதனை செய்த போது பாக்கெட் ஆனது இன்றைய தேதியில் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

மேலும் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவிக்கையில், நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் இந்த எண் கொண்ட ஆவின் பால் பாக்கெட் களை ஆய்வு செய்ய உள்ளதாகவும், தொடர்ந்து இதனை அடுத்து ஆய்வு அறிக்கை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டத்தில் மிக அதிகமான மக்கள் ஆவின் பாலை பயன்படுத்தி வரும் நிலையில் பால் பாக்கெட்டில் பு ழு மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *