லட்ச ரூபாய்க்கு 10 காயினாகக் கொடுத்து ஏதர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிய இளைஞர்!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பத்து ரூபாய் நாணயங்களை மட்டும் பயன்படுத்தி புதிய ஏதர் (Ather) 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். இப்படி வினோதமாக பெமெண்ட் கொடுத்த வாடிக்கையாளர் பற்றி ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் சி.இ.ஓ. தருண் மேத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், அந்த நூதன வாடிக்கையாளரிடம் தருண் மேத்தா பைக் சாவியை ஒப்பக்கும் காட்சி இடம் இடம்பெற்றுள்ளது. அந்த வாடிக்கையாளர் கொடுத்த 10 ரூபாய் நாணயங்கள் நிரப்பிய பைகளும் ஒரு மேசை மீது வைக்கப்பட்டிருப்பதைப் படத்தில் காணமுடிகிறது.

“ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு புதிய வாடிக்கையாளர் ஏதர் 450 வாங்கினார்… அனைத்தும் 10 ரூபாய் நாணயங்களுடன்!” என்று தருண் மேத்தா தனது பதிவில் ஆச்சிரியத்துடன் கூறியிருக்கிறார். அந்த வாடிக்கையாளர் ஏதர் 450 சீரிஸில் எந்த மாடல் ஸ்கூட்டரை வாங்கினார் என்று சரியான தகவல் தரப்படவில்லை.

ஆனால், தற்போது ஏதர் 450 சீரிஸில் 450S, 450X மற்றும் 450 Apex என மூன்று மாடல்கள் விற்பனையில் உள்ளன. இவற்றின் விலை ரூ.1.10 லட்சத்தில் தொடங்கி ரூ.1.89 லட்சம் வரை இருக்கும்.

இந்த மாடல்களைத் தவிர, ரிஸ்டா என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. ஸ்டாண்ட்-அப் காமெடி புகழ் அனுபவ் சிங் பாசி இது குறித்த தகவலை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அதற்கு முன்பே ஏதர் நிறுவனம் வரவிருக்கும் ரிஸ்டா ஸ்கூட்டரின் படங்களைப் பகிர்ந்து ஆவலைத் தூண்டியிருக்கிறது.

ஏதர் 450 சீரிஸ் அதன் வடிவமைப்பிற்காக அதிகமாக பாராட்டுகளைப் பெற்றது. ஆனால் புதிதாக வரும் ரிஸ்டா (Rizta) வேறுபட்ட வடிவமைப்பில் இருக்கிறது. குடும்பமாக பயணம் செய்ய ஏற்றது என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ரிஸ்டா மிகப்பெரிய இருக்கையைக் கொண்டிருக்கும் என்பதை ஏதர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ரிஸ்ட்டாவை தான் இதுவரை ஏதர் தயாரித்த மிகப்பெரிய ஸ்கூட்டராக இருக்கும் எனவும் கூறியிருக்கிறது.

இந்தப் புதிய மின்சார ஸ்கூட்டர் மற்ற ஏதர் மாடல்களுடன் ஒப்பிடும்போது மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச் மற்றும் செயல்திறனைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. பேட்டரியிலும் முன்னேற்றம் இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. ஆனால், இந்த விவரங்கள் குறித்து ஏதர் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *