லண்டனின் இளம் பாடகர்… கொடூர காணொளிகளால் ஆயிரக்கணக்கானோருக்கு எதிராக போட்ட பகீர் திட்டம்

வடக்கு லண்டனின் என்ஃபீல்ட் பகுதியை சேர்ந்த இளம் பாடகர் ஒருவர், கொடூர காணொளிகளால் ஈர்க்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோருக்கு எதிராக போட்ட பகீர் திட்டம் அம்பலமாகியுள்ளது.

பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு
என்ஃபீல்ட் பகுதியை சேர்ந்த 21 வயதான அந்த இளைஞருக்கு தற்போது நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த இளைஞரின் பாடல்களால் ஈர்க்கப்பட்ட இன்னொரு 17 வயது இளைஞருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

21 வயதான Al-Arfat Hassan வளரும் இளம் பாடகர். ஆனால் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு, தனது பாடல்களால் அந்த அமைப்பை பெருமைப்படுத்த முயன்று வந்துள்ளார்.

இவரது பாடல்களுக்கு என சிறு ரசிகர்கள் வட்டமும் இருந்துள்ளது. ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டிருந்த காணொளிகளால் ஈர்க்கப்பட்ட அல்-அர்ஃபாத் ஹசன் இணையமூடாக வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களை வாங்கியுள்ளார்.

அத்துடன் ரசாயன தாக்குதலுக்கும் தயாராகியுள்ளார். மேலும், தற்போது தண்டனை பெற்றுள்ள இருவரும் ஐ.எஸ் அமைப்பின் காணொளிகளை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கவும், கத்தியால் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட செயல்களையும் கற்றுக்கொண்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்ல வேண்டும்
இருவர் மீதும் பயங்கரவாத தாக்குதலுக்கு தயாரானதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இருவரும் பயங்கரவாத சதிச்செயலுக்கு திட்டமிட்டது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமது பாடல் மற்றும் செயற்பாடுகளால் இணையத்தில் ஒரு பெரும் இளைஞர் கூட்டத்தை தமது ஆதரவாளர்களாக திரட்டியுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021ல் இருந்தே இந்த இரு இளைஞர்களும் ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கபப்ட்டுள்ளதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

காணொளி ஒன்றில், சாமுராய் வாளுடன் தோன்றும் ஹசன், ஐ.எஸ் அமைப்புக்காக உயிரையும் விடத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளான். மட்டுமின்றி ஹசனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கத்தியில் ஒன்று, ஐ.எஸ் அமைப்பினர் மரண தண்டனையை விதிக்க பயன்படுத்தும் கத்தி போன்றது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹசன் தெரிவிக்கையில், ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்ல வேண்டும் என்றும், அதற்கான ஒரு திட்டமும், செயல்படுத்த வேண்டிய இடமும் தமது மனதில் இருப்பதாகவும் விசாரணையின் போது அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளான்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *