ஆமிர் கான் மகளின் திருமண வரவேற்பு.. கருப்புநிற கோட்.. மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர் சூர்யா – வீடியோ வைரல்!

பிரபல நடிகர் ஆமிர் கான், இதுவரை நேரடியாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு உண்டு என்றே கூறலாம். 58 வயது நிரம்பிய ஆமிர் கானுக்கு ஈரா கான் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 3ம் தேதி மும்பையில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.

ஜனவரி 3 ஆம் தேதி மும்பையில் ஈரா கான் மற்றும் நூபுர் ஷிகாரே ஆகிய இருவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். ஈரா கான், நடிகர் அமீர் கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி ரீனா தாத்தாவின் மகள் என்பது.குறிப்பிடத்தக்கது மிகவும் எளிய முறையில், நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்து இந்த திருமணம் நடைபெற்றது.

ஈரா கானை திருமணம் செய்துகொண்ட நூபுர் என்பவர் ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த ஜனவரி 3ம் தேதி ஜிமில் இருந்து கிளம்பி சுமார் 8 கிலோமீட்டர் ஜாகிங் முடித்த கையேடு, அதே முண்டா பனியன் மற்றும் அரைக்கால் டவுசரோடு அவர் திருமணத்திற்கு வந்திருந்தார். அப்போது மாப்பிள்ளையின் இந்த திருமண டிரஸ் மற்றும் அவர் ஆடிய நடனங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி மிகவும் எளிமையாக ஆமிர் கானின் மகள், ஈராக் கானின் திருமணம் நடைபெற்ற நிலையில், இன்று ஜனவரி 13ஆம் தேதி விமர்சையாக அவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் உலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

அதேபோல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா அவர்கள் இந்த திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். கருப்பு நிற ஆடை அணிந்து அவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

https://twitter.com/SuriyaFansClub/status/1746213763450327541

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *