ஆத்தி.. அந்த தனுஷ் ஹீரோயின் இப்படியெல்லாம் ஏமாத்தியிருக்காங்களா?.. ஷாக்கான ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அட்ரங்கி ரே படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான். இந்தி நடிகர் சைஃப் அலி கானின் மகள் தான் இவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தின் மூலமாக வாரிசு நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமான சாரா அலி கான்.
பப்ளியான நடிகையாக வலம் வரும் இவர் ஏகப்பட்ட ரசிகர்களை இந்தியா முழுவதும் கவர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 44.6 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். சமீபத்தில் சாரா அலிகானின் பாடி டபுள் நபரின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாரா அலி கான்: சைஃப் அலிகான் மற்றும் அவரது மனைவி அமிர்தா சிங்குக்கு மகளாகப் பிறந்த சாரா அலி கான் 2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சிம்பா, லவ் ஆஜ் கல், கூலி நம்பர் ஒன், தனுஷ் மற்றும் அக்ஷய் குமார் உடன் இணைந்து நடித்த அட்ரங்கி ரே, கேஸ் லைட், ராக்கி அவுர் ராணி கே பிரேம் கஹானி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விரைவில் மர்டர் முபாரக் எனும் படம் ரிலீஸ் ஆக உள்ளது.
சாரா அலிகான் டூப்: சினிமா பிரபலங்கள் அனைவருமே தங்களுடைய சஜஷன் ஷாட்டுக்காக கூட டூப்பை பயன்படுத்தி வருகின்றனர். ஹீரோக்கள் ஸ்டன்ட் காட்சிகளுக்கு மட்டும் டூப் பயன்படுத்தப்பட்டு வருவதாக பலரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், ஹீரோயின்கள் எப்படி எல்லாம் டூப்பை பயன்படுத்துகின்றனர் என யோசித்துப் பார்த்தால் ரசிகர்கள் தலையை சுற்றிப் போய்விடும். சமீபத்தில் நடிகை சாரா அலி கான் தனது டோப்லாங்கர் எனப்படும் பாடி டபுள் அல்லது டூப் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டான நிலையில் அதைப் பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
இப்படி ஏமாத்திட்டாரே: சார் அலி கான் தனது டூப்பை தைரியமாக வெளிக்காட்டி அவருடன் ஒவ்வொரு தருணத்திலும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்து ரசிகர்கள் அப்போ நாம திரையில் பார்த்தது எல்லாம் சாரா அலிகான் கிடையாதா? இப்படி ஏமாத்திட்டாரே என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சாரா அலி கானை விட அவரது டூப் நடிகையான இஷிகா ஜெய்வானி (Ishika Jaiwani) ரொம்ப அழகா இருக்கிறார் என்றும் பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.
நம்ம ஊரில் கஷ்டம்: பாலிவுட்டில் இளம் நடிகையான சாரா அலி கான் இப்படி வெளிப்படையாக தனது பாடி டபுள் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், நம்ம ஊரில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் எல்லாம் இப்படி ஓபனாக அவர்களுக்காக நிழலாக இருந்து கடுமையாக உழைத்து வருபவர்களை அடையாளம் காட்டுவார்களா? என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை ராஜா என்பது தான் பதிலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சாரா அலி கான் கைவசம் மட்டும் மொத்தம் 4 படங்கள் உள்ளன.