பர்சனல் லோன் வாங்குவதால் கிடைக்கும் எக்கச்சக்கமான பலன்கள்!!!
சில நேரங்களில் நமது அன்றாட செலவுகளை கருத்தில் கொள்வதால் மிகப் பெரிய இலக்குகளை சமரசம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம். உதாரணமாக, மேற்படிப்பிற்கு வெளிநாட்டிற்கு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது வீட்டை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற ஆசையாக இருந்தாலும் சரி தள்ளி போட வேண்டி உள்ளது. ஆனால் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக இது போன்ற இலக்குகளை நாம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விடுகிறோம்.
இந்த சூழ்நிலைகளில் ஒரு பர்சனல் லோன் நிச்சயமாக உங்களுக்கு உதவியாக இருக்கும். குறைந்த வட்டியிலான பர்சனல் லோனுக்கு நீங்கள் பல்வேறு விதமான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் பல்வேறு NBFCகள் மற்றும் வங்கிகள் எளிமையான தகுதி வரம்புகளுடன் குறைவான வட்டியில் பர்சனல் லோன்களை வழங்குகின்றன.
பர்சனல் லோன் எடுப்பதால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய சில பலன்கள் என்னவென்று பார்க்கலாம்:
கணிசமான லோன் தொகை
பர்சனல் லோனுக்கு விண்ணப்பிப்பதால் கிடைக்கக்கூடிய முக்கியமான பலன்களில் ஒன்று நீங்கள் எதிர்ப்பார்த்தபடி உங்களுக்கு கணிசமான லோன் தொகை வழங்கப்படும். கடன் வழங்குனர் மற்றும் கடன் பெறுபவரின் திருப்பி செலுத்தும் திறனை பொறுத்து பர்சனல் லோன்களுக்கான தொகை நிர்ணயிக்கப்படுகிறது. பஜாஜ் ஃபைனான்ஸ் பர்சனல் லோன் 40 லட்சம் வரையிலான தொகையை பர்சனல் லோன் ஆக வழங்குகிறது.
சிரமமில்லாத டாக்குமென்டேஷன்
பர்சனல் லோன்களுக்கு மிக குறைந்த டாக்குமென்ட்களே தேவைப்படுகிறது. உங்களது லோன் விண்ணப்பத்திற்கான அனைத்து டாக்குமென்ட்களையும் நீங்கள் டிஜிட்டல் முறையிலேயே சமர்ப்பிக்கலாம். உங்களது வயது, முகவரிக்கான சான்றிதழ், வருமான வரி ரிட்டன்கள், கிரெடிட் வரலாறு மற்றும் பிற விவரங்கள் விண்ணப்ப செயல்முறையின்போது நிதி நிறுவனங்களால் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
அடமானம் தேவையில்லை
பர்சனல் லோன்களுக்கு எந்த விதமான அடமானம் அவசியமில்லை. இதனால் அதிக அளவிலான தனி நபர்கள் சிரமம் இல்லாமல் பர்சனல் லோன்களை வாங்கிக் கொள்ளலாம்.
விரைவான பணம் வழங்குதல் செயல்முறை
பர்சனல் லோன்கள் விரைவாக பிராசஸ் செய்யப்பட்டு, அப்ரூவ் செய்யப்படுவதால் உங்களுக்கான பணம் உடனடியாக உங்களிடம் வந்து சேரும். உதாரணமாக, பஜாஜ் ஃபைனான்ஸ் பர்சனல் லோன்கள் கடன் அப்ரூவ் ஆன 24 மணி நேரத்தில் பணத்தை வழங்குகின்றன.
சௌகரியமான திருப்பி செலுத்தும் கால அளவு
கடன் பெறுபவர்கள் தங்களது கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வகையில் பர்சனல் லோன்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பர்சனல் லோன்களில் நீங்கள் மாத தவணையாக எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை பர்சனல் லோன் EMI கால்குலேட்டர் மூலமாக ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.