குவியும் பாராட்டுக்கள்..! கடலுக்குள் மூழ்கியபடி கதை எழுதி மாற்றுத் திறனாளி சாதனை..!

ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் மணி எழிலன்… இவர் சாலை விபத்தில் சிக்கி தனது ஒரு காலை இழந்தவர்.

இந்நிலையில் ஏதேனும் மாறுபட்ட சாதனை புரிய வேண்டும் என்று விரும்பிய மணி எழிலன் கடலுக்குள் மூழ்கி கதை எழுதுவது என்ற முடிவை எடுத்துள்ளார். இதற்காக தண்ணீரில் பயன்படுத்தக்கூடிய பேனாவை வாங்கியுள்ளார்.

அதன்பின் சென்னை நீலாங்கரை கடற்பகுதியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் கடலுக்குள் நீந்திச் சென்ற அவர் அங்கு 60 அடி ஆழத்தில் தன்னிடமுள்ள சிறப்பு பேனாவைக் கொண்டு கதை எழுதியுள்ளார். பின்னர் ஒவ்வொரு பக்கமாக தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்ப அவர்கள் கடலுக்கு மேற்பரப்பில் இருந்த அவர்கள், ‘பிரின்டர்’ சாதனத்தில் பிரின்ட் எடுத்து, சிறு கையேடாக தயாரித்தனர்.அந்த கையேடு, மணிஎழிலனிடம் வழங்கப்பட்டு, அவர் அதை, கடலுக்குள் வெளியிட்டார்.

மேலும் தண்ணீரில் நனைந்தாலும் சேதமடையாத வெட்புக் என்ற காகிதம், பேனா ஆகியவை பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 16 பக்கங்கள் கொண்ட கதையை எழுதி முடிக்க மணிஎழிலனுக்கு 54 நிமிடங்கள் தேவைப்பட்டன. இந்தக் கதைக்கு ’மையம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *