டாடா கார்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிப்பு! அதுவுக்கும் நெக்ஸான் இவி காருக்கு லட்சகணக்கில் தள்ளுபடி!
ஒவ்வொரு மாதமும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான தள்ளுபடிகளை வழங்கி வருகின்றனர். அதன்படி இந்த பிப்ரவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது ரூபாய் 1 லட்சம் வரையில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. டாடா நிறுவனத்தின் டியாகோ முதல் நெக்ஸான் இவி வரை பல்வேறு விதமான தள்ளுபடி அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் மக்கள் நம்பிக்கையை பெற்று தரமான கார்களை தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராக டாடா நிறுவனத்தின் கார்கள் இருப்பதால் மக்கள் பலர் இந்த நிறுவனத்தின் கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் டாடா நிறுவனத்தின் கார்களின் விற்பனை என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் டாடா நிறுவனம் தற்போது தனது கார்களுக்கான இந்த பிப்ரவரி மாத தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதன்படி டாடா டியாகோ காருக்கு மொத்தமாக ரூபாய் 55,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூபாய் 40 ஆயிரம் நேரடியாக கேஷ் தள்ளுபடியாக ரூபாய் 15,000 எக்சேஞ்ச் தள்ளுபடியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக டாடா டியாகோ காருக்கு ரூபாய் 60 ஆயிரம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரூபாய் 45,000 நேரடி கேஷ் செல்லும் வழியாகவும் ரூபாய் 15,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த காரை வாங்குபவர்கள் ரூபாய் 60 ஆயிரம் வரை பணத்தை மிச்சம் செய்ய முடியும்.
அடுத்ததாக டாடா டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி கார்களுக்கான தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு காலிலும் சிங்கிள் சிலிண்டர் காருக்கு நேரடியாக ரூபாய் 60,000 கேஷ் தள்ளுபடியாகவும் மற்றும் கூடுதலாக ரூபாய் 15,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தமாக ரூபாய் 75 ஆயிரம் வரை இந்த காருக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி கார்களுக்கு டிவின் சிலிண்டர் கொண்ட வேரியன்ட்களுக்கு ரூபாய் 35 ஆயிரம் வரை கேஷ் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 15,000 எக்சேஞ்ச் செல்லுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு காரில் எதை வாங்கினாலும் ட்வின் சிலிண்டர் கொண்ட இந்த காருக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக டாடா அல்ட்ராஸ் காரை பொருத்தவரை நேரடியாக ரூபாய் பத்தாயிரம் கேஸ் தள்ளுபடியும் ரூபாய் 15,000 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிலேயே மிகப்பெரிய ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் டாடா நெக்ஸான் இவி காருக்கான தள்ளுபடி தான் இந்த காருக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை நேரடி கேஷ் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதாவது இந்த டாடா நெக்ஸான் இவி காரை கடந்த 2023 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு ஸ்டாக்கில் உள்ள காரை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் அந்த காருக்கு மட்டுமே இந்த தள்ளுபடி செல்லுபடி ஆகும். தற்போது அப்டேட் செய்யப்பட்ட புதிய காருக்கு இந்த தள்ளுபடி செல்லுபடி ஆகாது. இதனால் பழைய காரை வாங்க விரும்புபவருக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கிறது.
இதே போல டாடா நிறுவனம் தனது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸான், ஹாரியர், சஃபாரி மற்றும் புதிய பஞ்ச் இவி கார்களுக்கு எந்த விதமான தள்ளுபடிகளும் வழங்கப்படவில்லை. நீண்ட நாட்களாக அப்டேட் செய்யப்படாமல் விற்பனை குறைந்து கொண்டு வரும் கார்களுக்கு மட்டுமே தள்ளுபடி அறிவித்து விற்பனையை அதிகரிக்க இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளது..