Actor Abbas: மகன் பிறப்பில் சந்தேகம்! டி.என்.ஏ பரிசோதனை செய்த பிரபல நடிகர்
பிரபல நடிகர் அப்பாஸ் மகன் பிறப்பில் சந்தேகப்பட்டு டிஎன்ஏ பரிசோதனை செய்ததாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகர் அப்பாஸ்
நடிகர் அப்பாஸ் கதில் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான் காதல்தேசம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே பெண்களின் மனதைக் கவர்ந்த நாயகனாக வலம் வந்தவர், தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொழிகளிலும் நடித்து வந்த அப்பாஸ் பின்பு சினிமாவில் சறுக்கலை சந்தித்தார்.
தொடர்ந்து உச்சத்தில் இருந்த இவர் பின்பு படங்கள் பெரும்பாலும் தோல்வி அடைந்ததால், சினிமா வாய்ப்பும் குறைந்துள்ளது. இதனால் குடும்பத்துடன் நியூசிலாந்திற்கு இடம் மாறினார்.
அங்கு குடும்பத்தை காப்பாற்ற மெக்கானிக்காக வேலை செய்து கஷ்டப்பட்டதையும் கூறி அதிர்ச்சியடைய வைத்தார். தற்போது இந்தியாவிற்கு வந்துள்ள இவர் அவ்வப்போது சில போட்டியும் கொடுத்துள்ளார்.
சர்ச்சையை கிளப்பிய பேட்டி
சமீபத்தில் தனது மகன் குறித்த விடயத்தை கூறி பகீர் கிளப்பியதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளார்.
இவர் கூறுகையில், தான் சிறுவயதில் அதிகமாக சேட்டை செய்ததாகவும், ஆனால் தனது மகன் மிகவும் அமைதியாகவும், எந்தவொரு சேட்டையும் செய்யாமலும் இருக்கின்றார். இதனை நம்பவே முடியாமல் இருந்ததுடன், தனது மகனுக்கு டி.என்.ஏ பரிசோதனை எடுத்து தனது மகன்தானா என்பதையும் தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார்.
இவரது பேச்சைக் கேட்ட இதெல்லாம் ஒரு செயலா? என்று சரமாரியாக சத்தம் போடவும், சிலர் மனதில் பட்டதை பேசியுள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.