நடிகர் சீயான் விக்ரமின் முழு சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ
விக்ரம்
தமிழ் சினிமாவில் இருந்து தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஒரு விக்ரம். இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான தோற்றம், மாறுபட்ட நடிப்பை வெளிக்காட்டி வருகிறார்.
அடுத்ததாக விக்ரம் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து விக்ரம் தற்போது தன்னுடைய 62வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அருண் குமார் இயக்கி வருகிறார். இவர் இதற்குமுன் இயக்கிய சித்தா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் சீயான் விக்ரமின் முழு சொத்து மதிப்பு ரூ. 240 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 25 முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் கூறுகின்றனர்.
சீயான் விக்ரம் பயன்படுத்தும் கார்கள், Porsche 911 Turbo – ரூ. 3.8 கோடி, Audi Q7 – ரூ. 80 லட்சம், Toyota Land Cruiser Prado – ரூ. 86 லட்சம், Audi A4 – ரூ. 46 லட்சம், Audi R8 – ரூ. 2.70 கோடி.