ஆடம்பர சொகுசு காரை வாங்கிய நடிகர் விஜய்… விலை எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் விஜய் தற்போது ஆடம்பர சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதான் தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் டாபிக் ஆக உள்ளது. பெரும்பாலான நடிகர் நடிகைகள் கார்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அது அவர்களுடைய சமூக அந்தஸ்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது.
அந்தவகையில் பிரபலங்கள் அதிகம் விரும்பும் காராக ரோல்ஸ் ராய்ஸ் உள்ளது. இதன் விலை சுமார் ரூ. 5 கோடிக்கும் அதிகம். தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவிலும் பிரபலங்கள் புதிய ரக சொகுசு கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். நடிகர் விஜயிடம் ஏற்கனவே ஒரு கருப்பு நிற ரோல்ஸ்ராய்ஸ் கார் உள்ளது.
பீஸ்ட் படம் நிறைவு பெற்ற பின்னர் இந்த காரில்தான் படக்குழுவினரை அவர் அழைத்துச் சென்று வீட்டில் விருந்து கொடுத்தார். அப்போது விஜயின் ரோல்ஸ்ராய்ஸ் கார் அதிகம் பேசப்பட்டது. இதன் விலை ரூ.5.25 கோடி என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் விஜய் தற்போது புதிய ரக எலக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பி.எம்.டபிள்யூ. i7 x Drive 60 என்ற சொகுசு கார் தான் விஜய் வாங்கியிருக்கும் புதிய கார் என்று கூறப்படுகிறது. இதன் விலை அதிகபட்சமாக ரூ. 2.50 கோடி இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்தமாக இந்த கார் 2,715 கிலோ எடை கொண்டதாக இருக்கும். காரில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு ஐந்தரை மணி நேரங்கள் ஆகலாம். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 625 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லலாம் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது
இந்த கார் குறித்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துள்ள சூழலில் இதனை வாங்குவதற்கு பல பிரபலங்களும் ஆர்வம் காட்டி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன