நடிகர் விஜய் வாங்கிய புதிய எலெக்ட்ரிக் கார்! இந்த காரோட விலை இவ்வளவு ஜாஸ்தியா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் தனக்கு சொந்தமாக எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. இதன்படி இவர் ரூபாய் 2 கோடி மதிப்பிலான உயர் ரக எலெக்ட்ரிக் கார் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். இவர் அந்த காரை தனது சொந்த பயன்பாட்டுக்காக பயன்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ் சினிமாவில் உச்சமான நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் இவர் சமீபத்தில் நடித்த வெளியான லியோ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிக முக்கியமான படமாக இது பேசப்பட்டது. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

பொதுவாகவே சினிமா நடிகர்கள் என்றால் அவர்களிடம் உயர் ரக கார்கள் எல்லாம் இருக்கும் அதிக விலை கொண்ட கார்களை வாங்கி சமூகத்தில் அவர்களுக்கான அந்தஸ்தை வைத்திருப்பார்கள். சினிமா நடிகர்கள் பற்றிய பேச்சு மக்கள் மத்தியில் அதிகம் இருக்கும் போது தான் அவர்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட் என்பது இருக்கும். இதனால் இப்படியான கார்களை வைத்திருப்பதும் அவர்கள் பற்றிய பேச்சை அதிகரிக்க ஒரு வழியாகும்.

இப்படியாக நடிகர் விஜய் இடமும் ஏராளமான கார்கள் உள்ளன. அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட ஏகப்பட்ட அதிக விலை கொண்ட கார்கள் எல்லாம் உள்ளன அவருக்கு கார்கள் என்றால் பிடிக்கும் என்பதால் அதிகமான கார்களை வாங்கி தனது கராஜில் வைத்துள்ளார். என்னதான் நடிகர் விஜய் இடம் அதிகமான கார்கள் இருந்தாலும் இவரிடம் இதுவரை ஒரு எலெக்ட்ரிக் கார் கூட இல்லை என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் புதிதாக எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கி உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ரூபாய் 2 கோடி மதிப்பிலான இந்த காரை தற்போது இவர் சொந்தமாக வாங்கி தனது சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் குறித்த தேடுதலை தான் தற்போது விஜய் ரசிகர்கள் பலர் செய்து வருகின்றனர்.

நமக்கு கிடைத்த தகவலின் படி நடிகர் விஜய் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐ7எக்ஸ் டிரைவ்50 என்ற காரை சொந்தமாக வாங்கியுள்ளார். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐ7 சீரிஸ் கார்களில் இந்த எக்ஸ் டிரைவ் 60 என்பது எலக்ட்ரிக் வெர்ஷன் காராகும் மொத்தம் மூன்று விதமான எலெக்ட்ரிக் வெர்ஷன் கார்கள் உள்ளன எக்ஸ் டிரைவ் 60, எம்70 எக்ஸ் டிரைவ், எக்ஸ் டிரைவ் 60 எம் ஸ்போர்ட், ஆகிய வேரியன்ட் கார்கள் விற்பனையாகி வருகின்றன.

விஜய் வைத்திருக்கும் காரை பொருத்தவரை 101.7 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கை கொண்ட கார் ஆகும் இது 536பிஎச்பி பவரையும் 745என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 625 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இந்த காரை ஒரு ஆல் வீல் டிரைவ் காராக உருவாக்கியுள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரை சார்ஜ் செய்ய 220 வோல்ட் சார்ஜர் வழங்கி உள்ளது. இந்த சார்ஜர் மூலம் இந்த காரை சார்ஜ் செய்யும் போது முழுமையாக பேட்டரி சார்ஜாக 52 மணி நேரம் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு சொகுசு ரக காராகும் இந்த காரின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த காரில் உள்ள பெர்ஃபார்மன்ஸ் தான்.

இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.7 நொடியில் பிக்கப் செய்து விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்க வீல்களும் பின்பக்க வீல்களும் மோட்டார் பொருத்தப்பட்டு அவை நேரடியாக உயிருடன் இணைக்கப்பட்டுள்ளன.

நடிகர் விஜய் இடம் ஏற்கனவே ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஆடி ஏ8, பிஎம்டபிள்யூ 7 சிரீஸ், எக்ஸ்6, மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்ஏ, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் எவோக், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஃபோர்டு மாஸ்டாக், உள்ளிட்ட கார்களும்,

வால்வோ எக்ஸ்சி 90, பென்ஸ் இ350டி, பென்ஸ் 3 சிரீஸ், மினி கூப்பர் எஸ், டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா, மாருதி சுஸூகி செலிரியோ ஆகிய கார்கள் உள்ளன. அவரிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட கார் தற்போது அதன் விலை ரூபாய்8 கோடியாகும்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *